அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
அம்பத்தூர் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
மக்களவைத் தொகுதி | திருப்பெரும்புதூர் |
மொத்த வாக்காளர்கள் | 384,377[1] |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | திமுக |
கூட்டணி | மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி (Ambattur Assembly constituency) என்பது தமிழ்நாட்டிலுள்ள 234 தொகுதிகளில் ஒன்றாகும். இதன் தொகுதி எண் 8.
2011 ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின் போது இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டது.
தொகுதியில் அடங்கும் பகுதிகள்
[தொகு]சென்னை மாநகராட்சியின் ஏழாவதாக உள்ள அம்பத்தூர் மண்டலம் வார்டு எண் 79 முதல் 93 வரை இதன் எல்லைகளாக உள்ளது. இதன் எல்லைகளாக உள்ள தொகுதிகள் வடக்கே மாதவரம் , தெற்கே மதுரவாயல் , கிழக்கே , அண்ணா நகர், வில்லிவாக்கம் மேற்கே ஆவடி. அம்பத்தூர் தொகுதியின் எல்லைகளாக உள்ள பகுதிகள். வடக்கே கள்ளிக்குப்பம், தாதன்குப்பம், தெற்கே முகப்பேர், திருமங்கலம், கிழக்கே பாடி , அண்ணா நகர் மேற்கு பகுதி மேற்கே அம்பத்தூர் நகரம் [2].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
2011 | எஸ். வேதாசலம் | அதிமுக | 99,330 | 53.30% | ரங்கநாதன் | திமுக | 76,613 | 41.11% |
2016 | வீ. அலெக்சாந்தர் | அதிமுக | 94,375 | 42.13% | ஜே. எம். எச். அசன் மவுலானா | காங்கிரசு | 76,877 | 34.32% |
2021 | ஜோசப் சாமுவேல் | திமுக | 114,554 | 47.67% | வீ. அலெக்சாந்தர் | அதிமுக | 72,408 | 30.13% |
வாக்குப்பதிவு
[தொகு]தேர்தல் ஆண்டு | நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|---|
2016 | 5,603 | % |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Wise Form 21E Details" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 23 Dec 2021.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 25 சூன் 2015.