உள்ளடக்கத்துக்குச் செல்

அம்சுமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்சுமான்
கிழவியுடன் உரையாடும் அம்சுமான்
பெற்றோர்கள்அசமஞ்சன்-அம்புஜாக்சி
குழந்தைகள்திலீபன்
நூல்கள்இராமாயணம், புராணங்கள்
சமயம்அயோத்தி, கோசல நாடு
அரசமரபுஇச்வாகு குலம்

அம்சுமான் (Amshuman (சமசுகிருதம்:अंशुमान्) அயோத்தியை தலைநகராகன் கொண்டு கோசல நாட்டை ஆண்ட சூரிய வம்சத்தின் இச்வாகு குல மன்னர் அசமஞ்சனின் மகன் ஆவார். மன்னர் சகரனின் மறைவிற்குப் பிறகு இவர் கோசல நாட்டின் அரியணை ஏறியவர். இவர் இராமரின் முன்னோர் ஆவார். அம்சுமானின் பேரன் பகீரதன் கங்கை ஆறு|கங்கை ஆற்றை]] சொர்க்கத்திலிருந்து பூமிக்கு கொண்டு வந்த பெருமை படைத்தவர்.

தொன்ம வரலாறு

[தொகு]

யாகக் குதிரை காணாமல் போதல்

[தொகு]

மன்னர் சகரன் அஸ்வமேத யாகம் செய்கையில், அவனது யாகக் குதிரையை , இந்திரன் திருடி பாதாள உலகததில் தவம் செய்து கொண்டிருந்த கபில முனிவரின் ஆசிரமத்தில் மறைத்து வைத்தான்.. யாகக் குதிரையைக் கண்டுபிடித்து தேடும் பணியில் தனது 60,000 மகன்களை மன்னர் சகரன் ஏவினான். யாகக் குதிரையைத் தேடி களைத்துப் போன சகர குமாரர்கள், இறுதியாக பாதாள உலகத்திற்கு சென்று, அங்கு கபில முனியின் ஆசிரமத்தில் கட்டப்பட்டிருந்த யாகக் குதிரையைக் கண்டனர். இது குறித்து தவத்தில் இருந்த கபில முனிவரை உசுப்பி விவரம் கேட்டனர். கோபமடைந்த கபில முனியின் கண் பார்வையால் 60,000 சகர குமாரர்கள் எரிந்து சாம்பலாயினர்.

சகர குமாரர்கள் யாகக் குதிரையை மீட்டு திரும்பாத காரணத்தினால், மன்னர் சகரன் தனது பேரன் அம்சுமானை, சகர குமாரர்களை தேடி அழைத்து வர கட்டளையிட்டான். [1]

கண்டு பிடித்தல்

[தொகு]

அம்சுமான் யாகக் குதிரை மற்றும் சகர குமாரர்களைத் தேடி பாதாள உலகம் சென்றான். அங்கு கபில முனிவரையும், யாகக் குதிரையையும் கண்டான். இது குறித்து தாம் வந்த விஷயத்தை முனிவருடன் கூறினான். அதற்கு கபில முனிவர் யாகக் குதிரையைத் தேடி வந்த 60,000 சகர குமாரர்கள் தனது கோபப் பார்வையால் சாம்பலாகிப் போனார்கள் என்றும், அவர்களது ஈமக்கிரியை கங்கை நீரால் முறைப்படி நடைபெற்றால் சொர்க்கம் செல்வர் எனத் தெரிவித்தார். பின் கபில முனிவரின் ஆசிரமத்தில் இருந்த அஸ்வமேதயாகக் குதிரையை அயோத்திக்கு கொண்டு வந்து மன்னர் சகரனிடம் ஒப்படைத்து, 60,000 சகர குமாரர்களின் இறப்பினையும், அவர்களுக்கு கங்கை நீரால் ஈமக்கிரியைகள் செய்தால் சொர்க்கம் செல்வார்கள் என்ற விவரத்தையும் தெரிவித்தான்.

தேவலோகத்தில் பாயும் கங்கை ஆற்று நீரை மன்னர் சகரனால் பூமிக்கு கொண்டு வர இயலவில்லை[2]சகரனுக்குப் பின் மன்னரான அம்சுமானல் கூட கங்கையை பூமிக்கு கொண்டு வர இயலவில்லை.[3]

பின் மன்னரான அம்சுமானின் மகன் திலீபனாலும் வானுலக கங்கை நீரை பூவுலகிற்கு கொண்டு வர இயலவில்லை. பின் திலீபனுக்கு பின் ஆட்சிக்கு வந்த அவனது மகன் பகீரதன்[4] கடும் தவம் இயற்றி, கங்கை நீரை பூமிக்கு கொண்டு வந்து, அந்நீரால் தனது மூதாதையர்களுக்கு ஈமக்கிரியை செய்தபடியால், சகர குமாரர்கள் 60,000 பேர் சொர்க்கம் சென்றனர்.[5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mahabharata Vana Parva - Translation by KM Ganguly | Mahabharata Stories, Summary and Characters from Mahabharata".
  2. "Valmiki Ramayana - reference 1.41.26 i.e. Balakanda, Sarga 41, Sloka 26". Retrieved 2019-07-28.
  3. "Valmiki Ramayana reference 1.42.1 i.e. Balakanda, Sarga 42, Sloka 1". Retrieved 2019-07-28.
  4. www.wisdomlib.org (2012-06-15). "Amshuman, Aṃśumān, Anshuman: 4 definitions". www.wisdomlib.org (in ஆங்கிலம்). Retrieved 2022-10-22.
  5. "Mahabharata Vana Parva - Translation by KM Ganguly | Mahabharata Stories, Summary and Characters from Mahabharata".
  6. "The Vishnu". Archived from the original on 29 August 2012. Retrieved 2012-08-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்சுமான்&oldid=4358505" இலிருந்து மீள்விக்கப்பட்டது