அம்சவர்தன்
அம்சவர்தன் | |
---|---|
பணி | நடிகர், தொழிலதிபர் |
வாழ்க்கைத் துணை | ரேஷ்மா |
பிள்ளைகள் | 3 |
அம்சவர்தன் (Hamsavardhan) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தொழில்
[தொகு]அம்சவர்தன் முதலில் ஆனந்தம் ஆனந்தம் என்ற படத்தில் நடித்தார், இந்த படத்தின் தயாரிப்புப் பணி 1998 ஆம் ஆண்டில் தொடங்கியது, படம் தாமதமாகி பின்னர் வடுகப்பட்டி மாப்பிள்ளை (2001) என வெளியிடப்பட்டது.[1] அதே படத்தின் இயக்குனரான வி. சி. குகநாதன் இயக்கத்தில் மகாஜிதன் என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த படம் உருவாக்கப்படவில்லை. அதேபோல், பிரீத்தா விஜயகுமார் ஜோடியாக வேண்டுமடி நீ எனக்கு என்ற படமும் அறிவிப்போடு நின்றுபோனது.[2] அம்சவர்தனின் முதல் வெளியீடான மானசீக காதல் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார், ஆனால் இந்த படம் வணிக ரீதியாக மோசமான தோல்வியைத் தழுவியது.[3][4] அதேபோல், அம்மு என்ற பெயரிலானத படத்தில் அபிதாவுக்கு ஜோடியாக இவர் நடித்த படமானது இடையில்நிறுத்தப்பட்டது.[5]
2002 ஆம் ஆண்டில், வணிக ரீதியாக வெற்றிபெற்ற பல நாயகர்கள் நடித்த படமான புன்னகை தேசம் படத்தில் தோன்றினார். அதில் தருண், சினேகா, பிரீத்தா, குணால் ஆகியோருடன் நடித்தார். அப்படமானது நல்ல விமர்சனங்களை பெற்றறது.[6] அந்த ஆண்டு ஜூனியர் சீனியர் படத்தில் நடித்தார். அதில் மூத்த மலையாள நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார், ஆனால் இந்த படம் வணிக ரீதியாக ஆச்சரியகரமாக தோல்வி அடைந்தது.[7]
இவர் தன் தந்தையின் இயக்கத்தில் மந்திரன் படத்தில் நடித்தார். மேலும் அந்த படத்தில் தந்தை-மகன் இணைந்து செயல்படுவது முதன்மை செய்தியாக அமைந்தது.[8] பின்னர் இவரது தந்தையின் இயக்கத்தில் காண்டீபன் என்ற பெயரிலான மற்றொரு படத்தில் நடிப்பதாகவும், நாகுவின் இடியட் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானதாகவும் அறிவிக்கப்பட்டது, ஆனால் முந்தைய படம் உருவாக்கப்படவில்லை. பிந்தைய படத்தில் இவருக்கு பதிலாக யோகி ஒப்பந்தம் செய்யப்பட்டார் .[9] இவரது அடுத்த வெளியீடான பிறகு படத்திற்காக இவர் தலையை மொட்டையடித்துக்கொண்டார். ஆனால் படம் கவனிப்பைப் பெறாமல் போனது.[10] குரு, பொம்மன் உள்ளிட்ட பிற படங்கள் 2009 இல் தொடங்கப்பட்டன, ஆனால் அவை முடிந்து வெளிவரவில்லை.[11]
2012 ஆம் ஆண்டில், பிரபலங்கள் துடுப்பட்ட கழகத்தில் சென்னை ரைனோஸ் அணிக்காக இவர் ஆடினார். 2018 ஆம் ஆண்டில், பீட்ரு என்ற படத்தின் வழியாக நடிப்புத் துறையில் மறுபிரவேசம் செய்வதாக அறிவித்தார், இது இன்னும் வெளியாகவில்லை.[12]
திரைப்படவியல்
[தொகு]ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1999 | மானசீக காதல் | அம்சவீர்த்தன், மதன் |
|
2001 | வடுகப்பட்டி மாப்பிள்ளை | விஜய் | |
2002 | புன்னகை தேசம் | செல்வம் | |
ஜூனியர் சீனியர் | சக்தி | ||
நேற்று வரை நீ யாரோ | தேவா | ||
2003 | இனிது இனிது காதல் இனிது | அஜய் | |
2005 | மந்திரன் | ஹம்சா | |
2007 | பிறகு | சத்யா |
குறிப்புகள்
[தொகு]
- ↑ https://web.archive.org/web/20050312000422/http://www.dinakaran.com/cinema/english/cinenews/15-07-98/seemaan.htm
- ↑ https://web.archive.org/web/20040624175706/http://www.dinakaran.com/cinema/english/interviews/22-07-98/preethaa.htm
- ↑ https://web.archive.org/web/20050301211557/http://www.dinakaran.com/cinema/english/cinenews/11-12-98/ravichan.htm
- ↑ "Archived copy". தி இந்து. 2005-12-22. Archived from the original on 9 November 2012. பார்க்கப்பட்ட நாள் 15 April 2012.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)CS1 maint: archived copy as title (link) - ↑ "24th". Archived from the original on 8 November 2004.
- ↑ "Archived copy". தி இந்து. 2002-01-25. Archived from the original on 1 April 2012. பார்க்கப்பட்ட நாள் 15 April 2012.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)CS1 maint: archived copy as title (link) - ↑ "Never say die". 31 December 2005 – via www.thehindu.com.
- ↑ "Action laced with romance". 24 June 2005 – via www.thehindu.com.
- ↑ "Archived copy". Archived from the original on 8 January 2009. பார்க்கப்பட்ட நாள் 15 April 2012.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Archived copy". Archived from the original on 26 April 2011. பார்க்கப்பட்ட நாள் 15 April 2012.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Archived copy". Archived from the original on 12 September 2008. பார்க்கப்பட்ட நாள் 15 April 2012.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Hamsavardhan makes a comeback with Peetru". The New Indian Express.