அமோனியம் அறுகுளோரோபலேடேட்டு
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
ஈரசேனியம்; அறுகுளோரோபலேடியம்(2-) | |
| வேறு பெயர்கள்
அமோனியம் அறுகுளோரோபலேடேட்டு(IV) | |
| இனங்காட்டிகள் | |
| 19168-23-1 | |
| ChemSpider | 56476 |
| EC number | 242-854-9 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 24859373 |
| |
| பண்புகள் | |
| Cl6H8N2Pb | |
| வாய்ப்பாட்டு எடை | 455.98 g·mol−1 |
| தோற்றம் | செம்பழுப்பு நிறப் படிகங்கள் |
| அடர்த்தி | 2.148 கி/செ.மீ3 |
| சிறிதளவு கரையும் | |
| தீங்குகள் | |
| GHS குறியீடு: | |
விளக்கப்படங்கள் |
|
குறியீட்டுச் சொல் |
எச்சரிக்கை |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
அமோனியம் அறுகுளோரோபலேடேட்டு (Ammonium hexachloropalladate) என்பது (NH4)2PdCl6என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமோனியம் எக்சாகுளோரோபலேடேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.[1][2]
தயாரிப்பு
[தொகு]அமோனியம் குளோரைடு கரைசலில் கரைக்கப்பட்ட அமோனியம் டெட்ராகுளோரோபலேடேட்டு(II) தொங்கலில் குளோரின் வாயுவை செலுத்துவதன் மூலம் அமோனியம் அறுகுளோரோபலேடேட்டைத் தயாரிக்கலாம்:
- (NH4)2[PdCl4] + Cl2 -> (NH4)2[PdCl6]
பல்லேடியம்(IV) குளோரைடு கரைசலில் அம்மோனியம் குளோரைடைச் சேர்ப்பதன் மூலமும் அமோனியம் அறுகுளோரோபலேடேட்டை வீழ்படிவாக்கலாம்:[3]
- PdCl6 + 2NH4Cl → (NH4)2[PdCl6] + 2HCl
இயற்பியல் பண்புகள்
[தொகு]அமோனியம் அறுகுளோரோபலேடேட்டு கனசதுரப் படிக அமைப்பில் Fm3m என்ற இடக்குழுவில் a = 0.983 நானோமீட்டர் , Z = 4 என்ற செல் அளவுருக்களுடன்[4] செம்பழுப்பு நிறப் படிகங்களாக உருவாகிறது.[5]
இச்சேர்மம் தண்ணீரில் சிறிதளவு கரைகிறது.
வேதியியல் பண்புகள்
[தொகு]அமோனியம் அறுகுளோரோபலேடேட்டை சூடுபடுத்தினால் சிதைவடைந்து அமோனியம் டெட்ராகுளோரோபலேடேட்டு(II) உருவாகிறது:
- (NH4)2[PdCl6] → (NH4)2[PdCl4] + Cl2
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ammonium hexachloropalladate(IV)". Sigma Aldrich. Retrieved 7 October 2024.
- ↑ "Ammonium Hexachloropalladate(IV)" (in ஆங்கிலம்). American Elements. Retrieved 7 October 2024.
- ↑ Guindy, M. I. El (22 October 2013). Precious Metals 1982: Proceedings of the Sixth International Precious Metals Institute Conference, Held in Newport Beach, California, June 7 - 11, 1982 (in ஆங்கிலம்). Elsevier. p. 466. ISBN 978-1-4831-8948-2. Retrieved 7 October 2024.
- ↑ Donnay, Joseph Désiré Hubert (1973). Crystal Data: Inorganic compounds (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. 254. Retrieved 7 October 2024.
- ↑ Lide, David R. (9 March 1995). CRC Handbook of Chemistry and Physics: A Ready-reference Book of Chemical and Physical Data (in ஆங்கிலம்). CRC Press. p. 4-41. ISBN 978-0-8493-0595-5. Retrieved 7 October 2024.