அமோகபாசா கல்வெட்டு
அமோகபாசா கல்வெட்டு (ஆங்கிலம்: Amoghapasa Inscription இந்தோனேசியம்: Prasasti Amoghapasa) என்பது பாடாங் ரோக்கோ கல்வெட்டின் (Padang Roco Inscription) மேல்பகுதியில் உள்ள அமோகபாசா சிலையின் (Pāduka Amoghapāśa; Avalokiteśvara) பின்புறத்தில் எழுத்து வடிவங்களில் உள்ள் கல்வெட்டு ஆகும்.
1347-ஆம் ஆண்டில், ஆதித்தியவர்மன், பாடாங் ரோக்கோ கல்வெட்டின் அமோகபாசா சிலையின் பின்புறத்தில் இந்தக் கல்வெட்டைச் சேர்த்தார்[1]:232 அந்தச் சிலை தன்னை சித்தரிப்பதாக ஆதித்தியவர்மன் அறிவித்தார்.
இன்று இந்தக் கல்வெட்டு, ஜகார்த்தாவில் உள்ள இந்தோனேசியாவின் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது.
பாடாங் ரோக்கோ கல்வெட்டு
[தொகு]பாடாங் ரோக்கோ கல்வெட்டு என்பது 1286-ஆம் ஆண்டு, இந்தோனேசியா, மேற்கு சுமாத்திரா, தருமசிராயா மாநிலம், சித்தியூங் மாவட்டம், நாகரி சிகுந்தர், பாடாங் ரோக்கோ, பாத்தாங்காரி ஆற்றின் மூலத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும்.[2]
இந்தக் கல்வெட்டு, அவலோகிதர் சிலையின் அடித்தளமாக உள்ளது.[3]
அமோகபாசா கல்வெட்டின் பின்புறம் (D.198-6469) எனும் குறியீடு செதுக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க
[தொகு]- பாடாங் ரோக்கோ கல்வெட்டு
- சுருவாசோ கல்வெட்டு
- லோபோ துவா கல்வெட்டு
- சியாருடூன் கல்வெட்டு
- சங்கல் கல்வெட்டு
- துகு கல்வெட்டு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-0368-1.
- ↑ Muljana, Slamet, 1981, Kuntala, Sriwijaya Dan Suwarnabhumi, Jakarta: Yayasan Idayu, hlm. 223.
- ↑ Hendrik Kern, 'De Wij-inscriptie op het Amoghapâça-beeld van Padang-tjandi (Midden-Sumatra) 1269 Caka', Tijdschrift voor Indische taal-, land- en volkenkunde, Uitgegeven door het Bataviaasch Genootschap van Kunsten en Wetenschappen (TBG), 49, 1907, pp.159-171; also Hendrik Kern, 'De Wij-inscriptie op het Amoghapaca-beeld van Padang Candi (Midden-Sumatra) 1269 Caka', Verspreide Geschriften, The Hague, Martinus Nijhoff, Vol. VII, 1917, pp.165-75.