அமைப்பியல் கோட்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமைப்பியல் கோட்பாடு என்பது நாட்டுப்புறவியல் ஆய்வுக்கோட்பாடுகளுள் ஒன்றாகும்.

அமெரிக்க நாட்டுப்புறவியல் அறிஞர்களிடையே 1960ஆம் ஆண்டு அளவில் மிகுந்த செல்வாக்குப் பெற்ற கோட்பாடாகும்.இக்கோட்பாட்டின் தந்தை இரஷ்யநாட்டுப் பேரறிஞர் விளாடிமிர் பிராப் ஆவார்.இவர் ரஷ்யமொழியில் 1928ஆம் ஆண்டு நாட்டுப்புறக் கதைகளின் உள்ளமைப்பு என்ற நூலை வெளியிட்டார்.இதே நூல் ஆங்கிலத்தில்1958ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது . தமிழில் அமைப்பியல் கோட்பாட்டைத் தாலாட்டிற்கும் ஒப்பாரிக்கும் பயன்படுத்தி முதலில் ஆய்வு செய்தவர் பா.ரா.சுப்பிரமணியம் என்பவராவார். இக்கோட்பாட்டை மற்ற நாட்டுப்புற இலக்கியங்களுக்கும் பயன்படுத்தலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமைப்பியல்_கோட்பாடு&oldid=3601993" இருந்து மீள்விக்கப்பட்டது