அமைதி மற்றும் மனிதநேய பிரபஞ்ச அழகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமைதி மற்றும் மனிதநேய பிரபஞ்ச அழகிப் போட்டி, (Miss Universal Peace and Humanity) சர்வதேச மனித உரிமை அமைப்பு மற்றும் உலக சமாதான தொண்டு நிறுவனம் சார்பில் பன்னாட்டளவில் ஆண்டு தோறும் நடைபெறுகிறது.

இவ்வாண்டு லெபனான் நாட்டில் 10 டிசம்பர் 2014இல் நடந்த அமைதி மற்றும் மனிதநேய பிரபஞ்ச அழகிப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 145 இளம்பெண்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் கலந்து கொண்ட ஜெய்ப்பூர் நகரை சேர்ந்த 22 வயது ருகி சிங் (Ruhi Singh) அமைதி மற்றும் மனிதநேய பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ருகி சிங்குக்கு கிரீடம் சூட்டப்பட்டு, 50 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசு தொகையும் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் உலக சுற்றுலா மற்றும் அமைதிக்கான தூதுவராக செயல்பட உள்ளார். [1].

மேற்கோள்கள்[தொகு]

  1. http://femina.in/lifestyle/in-the-news/meet-miss-universal-peace-and-humanity-3206.html

வெளி இணைப்புகள்[தொகு]