அமைதி மற்றும் சுதந்திரத்திற்கான அனைத்துலக பெண்கள் அமைப்பு
![]() | |
உருவாக்கம் | 1915 |
---|---|
நிறுவனர்கள் |
|
வகை | இலாப நோக்கற்ற அமைப்பு |
தலைமையகம் | ஜெனீவா |
வலைத்தளம் | www |
அமைதி மற்றும் சுதந்திரத்திற்கான அனைத்துலக பெண்கள் அமைப்பு (Women's International League for Peace and Freedom) என்பது ஒரு இலாப நோக்கற்ற அரசு சாரா அமைப்பாகும். இது போரின் காரணங்களை ஆய்வு செய்வதற்கும் வெளிப்படுத்துவதற்கும் ஒரு நிரந்தர அமைதிக்கு பணியாற்றுவதற்கும் தீர்மானித்த பல்வேறு அரசியல் கருத்துக்கள் மற்றும் தத்துவ மற்றும் மத பின்னணியைச் சேர்ந்த பெண்களை ஒன்றிணைக்கிறது. மேலும், உலகளவில் ஒடுக்குமுறை மற்றும் பாலின வாதத்தை எதிர்க்கும் பெண்களை ஒன்றினைக்கிறது. இந்த சங்கம் 37 நாடுகளில் தேசியப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.
அமைதி மற்றும் சுதந்திரத்திற்கான அனைத்துலக பெண்கள் அமைப்பு ஜெனீவாவைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளது. மேலும், நியூயார்க்கு நகரின் ஐக்கிய நாடுகள் அவையில் அலுவலகத்தை பராமரிக்கிறது.[1]
அமைப்பின் வரலாறு
[தொகு]
1915 ஆம் ஆண்டில் நெதர்லாந்தின் டென் ஹாக்கில் நடந்த முதலாம் உலகப் போருக்கு எதிரான அனைத்துலக பெண்கள் மாநாட்டில் நிரந்த அனைத்துலக பெண்கள் குழு உருவாக்கப்பட்டது. மேலும், நிரந்தர அமைதிக்கான 1919 வரை அமைதி மற்றும் சுதந்திரத்திற்கான அனைத்துலக பெண்கள் சங்கம் என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.[2] இந்த அமைப்பின் தலைவர் ஜேன் ஆடம்சு, முன்னர் அமெரிக்காவில் மகளிர் அமைதிக் கட்சியை நிறுவியிருந்தார். ஜனவரி 1915 இல், இந்தக் கட்சி பின்னர் அமைதி மற்றும் சுதந்திரத்திற்கான அனைத்துலக பெண்கள் அமைப்பின் அமெரிக்கப் பிரிவாக மாறியது. ஜேன் ஆடம்சுடன், மரியன் கிரிப்ஸ் மற்றும் மார்கரெட் ஈ. டங்கன் ஆகியோரும் நிறுவன உறுப்பினர்களாக இருந்தனர். பிரித்தானியரான மௌட் ராய்டன் அமைதி மற்றும் சுதந்திரத்திற்கான அனைத்துலக பெண்கள் அமைப்பின் துணைத் தலைவராக இருந்தார்.[3] 1920 ஆம் ஆண்டு நிலவரப்படி, அமைப்பின் அமெரிக்கப் பிரிவு நியூயார்க் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டிருந்தது.[4] மரியன் கிரிப்ஸ், பரோனஸ் பர்மூர், பின்னர் அதன் பிரித்தானியக் கிளையின் தலைவராக பணியாற்றினார்.[5]
மேலும், அமைதி மற்றும் சுதந்திரத்திற்கான அனைத்துலக பெண்கள் அமைப்பு போர்கள் மற்றும் அனைத்துலக மோதல்களை எதிர்க்கிறது. கொரியப் போரை முறையாக முடிவுக்குக் கொண்டுவருமாறு ஐ. நா. பொதுச்செயலாளருக்கு எழுதிய கடிதம், ஆயுதங்கள் குறித்த அறிக்கை மற்றும் அணு ஆயுதங்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கான அனைத்துலக தினம், பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் பெண்கள் மனித உரிமை பாதுகாவலர்கள் ஆகியவை இந்த அமைப்பின் முக்கிய நிகழ்வுகளாகும்.
பெண்கள் அமைதிக் கட்சி (அமெரிக்கா)
[தொகு]அமைதி மற்றும் சுதந்திரத்திற்கான மகளிர் சர்வதேச சங்கத்தின் முன்னோடியான பெண்கள் அமைதிக் கட்சி ஜனவரி 1915 இல் வாசிங்டன் டி. சி. யில் ஜேன் ஆடம்சு மற்றும் கேரி சாப்மேன் கேட் ஆகியோரின் தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் உருவாக்கப்பட்டது. பெண்களுக்கு வாக்குரிமை நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் நடுநிலை நாடுகளின் மாநாட்டின் மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு வழியாக தொடர்ச்சியான மத்தியஸ்தத்தை வழங்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் சுமார் 3,000 பெண்கள் கலந்து கொண்டனர்.
குறிப்பிடத்தக்க உறுப்பினர்கள்
[தொகு]- ஜேன் ஆடம்ஸ்
- அலெட்டா ஜேக்கப்ஸ்
- ஆலிஸ் வாக்கர்,[6]
- கோரெட்டா ஸ்காட் கிங், [7]
- எமிலி கிரீன் பால்ச்
- லூசி பிடில் லூயிஸ்[8]
- லீனா பி. மேதஸ்.[9]
- மேரி-கிளேர் பாராய்[10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Staff writer (2024). "Women's International League for Peace and Freedom (WILPF)". uia.org. Brussels, Belgium: Union of International Associations. Retrieved 24 December 2024.
- ↑ Bussey, Gertrude; Tims, Margaret (1980). Pioneers for Peace. Women's International League for Peace and Freedom 1915-1965. Oxford: Alden Press.
- ↑ Grenier, Janet E. (2004). 'Courtney, Dame Kathleen D'Olier (1878–1974)'Oxford Dictionary of National Biography. Oxford, England: Oxford University Press.
- ↑ Harriet Hyman Alonso (1993). "Former Suffragists for Peace during the Interwar Years, 1919-1935". Peace As a Women's Issue: A History of the U.S. Movement for World Peace and Women's Rights. Syracuse University Press. pp. 85–124. ISBN 978-0-8156-0269-9.
- ↑ "Sir John Lavery Portrait of The Lady Parmooor Oil on canvas, 76 x 64cm (30 x 25) Signed". Retrieved 6 January 2013.
- ↑ "Women's International League for Peace and Freedom [WILPF] Records, Accessions from 2000-2013, Swarthmore College Peace Collection". www.swarthmore.edu. Retrieved 2017-09-19.
- ↑ "Women's International League for Peace and Freedom [WILPF] Records, Accessions from 2000-2013, Swarthmore College Peace Collection". www.swarthmore.edu. Retrieved 2017-09-19.
- ↑ "Mrs. Lucy Lewis, Pacifist, Dies". https://www.newspapers.com/clip/116752299/mrs-lucy-lewis-pacifist-dies/.
- ↑ "Mathes, Lena Boyce Mays (1861-1951) · Jane Addams Digital Edition". digital.janeaddams.ramapo.edu. Ramapo College. Retrieved 18 February 2024.
- ↑ Elbagir, Nima (2012-11-30). "'Give African women a voice,' say activists". CNN (in ஆங்கிலம்). Retrieved 2024-11-06.
வெளி இணைப்புகள்
[தொகு]
அமைதி மற்றும் சுதந்திரத்திற்கான அனைத்துலக பெண்கள் அமைப்பு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- WILPF Australia Section official website
- WILPF Austria Section official website
- WILPF Germany Section official website
- Jane Addams Peace Association
- Peace Women
- Reaching Critical Will
- Women's International League for Peace and Freedom, International Headquarters records, University of Colorado at Boulder
- Women's International League for Peace and Freedom, American Section records, Collection DG 043, Swarthmore College
- Women's International League for Peace and Freedom, British Section records, London School of Economics, Archives Division
- Women's International League for Peace and Freedom selected papers and photos included in Peace and Internationalism Digitised Collection, LSE Digital Library
- Records, 1915-1977. Schlesinger Library, Radcliffe Institute, Harvard University
- Women's International League for Peace and Freedom Collection (ARS.0056), Stanford Archive of Recorded Sound
- Archives of the British section of WILPF