உள்ளடக்கத்துக்குச் செல்

அமைதித் தலைமுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமைதித் தலைமுறை (Silent Generation) என்பவர்களை முதிர்ச்சியாளர்கள் என்றும் அழைப்பர். இத்தலைமுறையினர் 1924 - 1945 இடையே பிறந்தவர்கள். அதிக மன அழுத்தம், மன வலிமையோடு வாழ்ந்த இத்தலைமுறையினர் பஞ்சம், பட்டினியோடு இரண்டாம் உலகப் போரையும் பார்த்தவர்கள். 1950கள் மற்றும் 1960களின் பொருளாதார ஏற்றம் மற்றும் சமூக நலனுக்கு பங்களித்தவர்கள்.[1] இவர்களுக்குப் பின் பிறந்தவர்கள் பூமர் தலைமுறையினர் ஆவர்.

பொதுவான பண்புகள்

[தொகு]

இத்தலைமுறையினர் தங்கள் முதலாளிகள், குடும்பங்கள், சமூகங்களுக்கு நன்றியோடு இருந்தனர். மேலும் இணக்கம், ஒழுக்கம், மரியாதையுடன் வாழ்ந்தனர். பெரும்பான்மையினர் போராட்ட குணம், கடின உழைப்பு, மன உறுதியைக் கொண்டவர்கள். பிரச்சினைகளைக் கலைகளின் வழிகொண்டு கடந்து வந்தவர்கள் என்பதால் இந்தத் தலைமுறையினர் இசை, நடனம் போன்ற கலைகளிலும், கல்வியிலும் சிறந்து விளங்கியவர்கள். போரால் கடினமான பொருளாதார வீழ்ச்சிகளை எதிர்கொண்டவர்கள் என்பதால் இயல்பிலேயே வாழ்க்கைமுறையில் அதிக ஒழுங்கைக் கைக்கொண்டவர்கள்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமைதித்_தலைமுறை&oldid=4207594" இலிருந்து மீள்விக்கப்பட்டது