அமைதிக்கல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அமைதிக்கல்வி அமைதிக்கல்வி என்பது விழுமிய கல்விப்பாங்குகளான அகிம்சை ,சகிப்புத்தன்மை ,பொறையுடைமை ,கூடிவாழும் உணர்வு மற்றவர்களின் கருத்துக்களை கேட்டறிதல் ,மற்றவர்களின் உணர்வை மதித்தல் ,கலாச்சார பன்மய வகைப்பாடுகளை விரும்புதல் ,நீதி ,சமத்துவம் ,வாய்மை ஆகியவற்றை வலுப்படுத்துவதாகும் . அமைதி மனப்பான்மையை நிலைப்படுத்துதல் ,வன்முறையை வெறுத்தல் ,நல்லிணக்கம் ,மற்றவர் உரிமைகளை மதித்தல் முதலான மனபெற்றிமைகளை மாணவரிடையே வளர்த்தாக்கிட வேண்டிய கற்றல் அனுபவங்களைபி பாடத்திட்டத்தில் சேர்த்துத் திட்டமிட்டுப் பயிற்சி அளிப்பது அமைதிக்கான கல்வி எனப்படுகிறது . அமைதிக்கல்வி ,அமைதிகானக்கல்வி என்பவை ஒன்றுக்கொன்று இணையானவை . அமைதிக்கான கல்விகுறித்து தேசிய கலைத்திட்ட வடிவமைப்பில் கீழ்கான் இரண்டு நோக்கங்களினடிப்படையில் பட்டியல் தயாரித்துள்ளது : -வன்முறை இல்லாத ,அகிம்சை வழிமுறைகளைத்தனிமனிதன் தேர்ந்தெடுப்பதற்கான மனப்பான்மையைத் தருதல்

-அமைதியை விரும்புவர்களாகவும் ,அமைதியை அனுபவிப்பவகர்களாவும் மட்டுமன்றி அமைதியை உருவாக்குபவர்களாகவும் ,நிலநடுபவர்களாகவும் மாணவர்களை உருவாக்குவது [1]

  1. அமைதிக்கல்வி பயிற்சி ஏடு ,மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ,பெருந்துறை ,ஈரோடு மாவட்டம் ,தமிழ்நாடு ,2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமைதிக்கல்வி&oldid=2723206" இருந்து மீள்விக்கப்பட்டது