அமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அமைட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மூன்று விதமான அமைட்டுக்களின் கட்டமைப்புக்கள்: ஒரு சேதன அமைட்டு, ஒரு கந்தக அமைட்டு, ஒரு பொசுபரமைட்டு.

அமைட்டு (அமைடு, Amide) என்பது RnE(O)xNR'2 (R மற்றும் R' என்பது H அல்லது அல்கைல் கூட்டம்) எனும் பொதுச் சூத்திரத்தையுடைய சேர்வையாகும். மிகவும் பொதுவான அமைட்டுக்கள் "சேதன அமைட்டுக்கள்" (n = 1, E = C, x = 1) ஆகும். எனினும், மேலும் பல முக்கிய அமைட்டுக்கள் காணப்படுகின்றன. இவற்றுள், பொசுபர் அமைட்டுக்கள் (n = 2, E = P, x = 1) மற்றும் சல்ஃபனமைட்டுக்கள் (E = S, x= 2) ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.[1]

அமைட்டுக்கள் அமோனியாவின் (H2N) அல்லது சேதன அமைனின் (R2N) இணைமூலமாகவும் கருதப்படலாம்.

கட்டமைப்பும் பிணைப்பும்[தொகு]

எளிய அமைட்டுக்கள் அமோனியாவின் ஒரு ஐதரசன் அணுவை ஏசைல் கூட்டத்தால் பிரதியிடுவதன் மூலம் உருவாக்கப்படும். இவை RC(O)NH2 எனும் பொதுச் சூத்திரத்தைக் கொண்டவை. மேலும் பலவகையான அமைட்டுக்கள் முதலமைன்களிலிருந்து(R'NH2) உருவாக்கப்படும். இவற்றின் பொதுச் சூத்திரம் RC(O)NHR' ஆகும். மேலும் இவை வழியமைன்களிலிருந்தும் (R'RNH) உருவாக்கப்படலாம். இவற்றின் பொதுச் சூத்திரம் RC(O)NR'R ஆகும். அமைட்டுக்கள் வழமையாக காபொட்சிலிக் அமிலத்தின் பெறுதியாகவே கருதப்படுகின்றன. இங்கு ஐதரொட்சில் கூட்டம் ஒரு அமைன் அல்லது அமோனியாவினால் பிரதியிடப்படும்.

அமைட்டின் பரிவு:

நைதரசனில் உள்ள தனிச் சோடி இலத்திரன்கள் காபனைல் கூட்டத்தில் ஓரிடப்படாமல் காணப்படும். இதனால் நைதரசனுக்கும் காபனைல் காபனுக்கும் இடையில் ஒரு, பகுதியான இரட்டைப் பிணைப்பு ஏற்படுத்தப் படும். மேலும் அமைட்டிலுள்ள நைதரசனின் வடிவமும் கூம்பக வடிவிலிருந்து மாறுபடும். பரிவுக் கட்டமைப்பிலிருந்து, அசற்றமைட்டின் கட்டமைப்புக்கான சாத்தியக்கூறுகள் Aக்கு 62%மும், Bக்கு 28%மும் ஆகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://goldbook.iupac.org/A00266.html
  2. "Amide Resonance" Correlates with a Breadth of C-N Rotation Barriers Carl R. Kemnitz and Mark J. Loewen J. Am. Chem. Soc.; 2007; 129(9) pp 2521 - 2528; (Article) எஆசு:10.1021/ja0663024
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமைடு&oldid=2225644" இருந்து மீள்விக்கப்பட்டது