உள்ளடக்கத்துக்குச் செல்

அமெரிக்க வாதவியல் குழுமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமெரிக்க வாதவியல் குழுமம் (American College of Rheumatology; ACR) கல்வி திட்டங்கள், ஆராய்ச்சி, வாத மற்றும் தசை-எலும்பு மண்டல நோய்களால் தாக்கப்பட்டவர்களுக்கான மிகச்சிறந்த பராமரிப்பை ஆதரித்தல் மூலமாக வாதவியலின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் மருத்துவர்கள், உடல்நலப் பணியாளர்கள், ஆய்வாளர்களைக் கொண்ட, அவர்களுக்கான ஒரு அமைப்பாகும்[1].

இக்குழுமம், அறிவியல் கூட்டங்களை ஏற்பாடு செய்தல், இரு மருத்துவ ஆய்விதழ்களை (Arthritis & Rheumatism மற்றும் Arthritis Care & Research) வெளியிடுதல், ஆய்வு மற்றும் கல்வி நிறுவனத்தின் மூலமாக வாதநோயறியும் வகைப்பாட்டு விதிகளை வெளியிடுவதையும் உள்ளடக்கிய வாதநோய் ஆய்வினை மேம்படுத்துதல் ஆகியப் பணிகளைச் செய்கிறது[2].

மேற்கோள்கள்

[தொகு]
  1. American College of Rheumatology. "About the ACR". Archived from the original on 2008-02-12. பார்க்கப்பட்ட நாள் 2008-02-27.
  2. American College of Rheumatology. "Classification and Response Criteria for Rheumatic Diseases". Archived from the original on 2010-04-25. பார்க்கப்பட்ட நாள் 2010-04-27.

வெளியிணைப்புகள்

[தொகு]