அமெரிக்க மாந்தல் மீன்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அக்கிரைடீ
Lined sole.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: ஆக்டினோப்டெரிகீ
வரிசை: பிளியூரோனெக்டிபார்மசு
குடும்பம்: அக்கிரைடீ
பேரினம்

பல; கட்டுரையில் பார்க்கவும்

அக்கிரைடீ (Achiridae) என்பது அமெரிக்காக்களின் கடல்களிலும், நன்னீரிலும் வாழும் தட்டைமீன்களைக் கொண்ட குடும்பம் ஆகும். இக் குடும்பத்தில் 6 பேரினங்களைச் சேர்ந்த 35 இனங்கள் உள்ளன. இவை சொலிடீக்களுக்கு நெருங்கிய உறவுடையவை. ஆனாலும் ஆக்கிரைடீக்கள் பல தனித்துவமான இயல்புகளைக் கொண்டவை. இவைகளைப் பொதுவாக அமேரிக்கன் சோல்கள் என விளிக்கப்படுகிறது.

கண்கள் வலது பக்கத்தில் காணப்படுகின்றன. கண்கள் இருக்கும் பக்கத்தில் உள்ள கீழுதட்டுப் பகுதி தசைப் பிடிப்பான வளையத்தைக் கொண்டுள்ளது. முதுகுத் துடுப்பும், குதத் துடுப்பும் வழமையாக வால் துடுப்பிலிருந்து வேறாகக் காணப்படும். முன் துடுப்பு (மார்புச் செட்டை) சிறிதாக இருக்கும் அல்லது இல்லாமலே இருக்கக்கூடும்.

முக்கியப் பண்புகள்[தொகு]

  • தட்டைமீன்களில் (பிளூரோநெக்டிபார்மிசு) வரிசையில் சிறிய வகை மீன்களாகும்.
  • நிறப்படிவமும் கண்களும் வலப்புறம் வீற்றிருக்கும் (இடப்புறக் கண்கள் கொண்ட மீன்கள் மிக அறிதாகவேக் காணப்படும்.
  • பக்கவாட்டுத் தோற்றதில் உடல் வட்டம்(அ) நீள்வட்ட வடிவில் காட்சியளிக்கும்.

அக்கிரைடீ குடும்பம்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]