அமெரிக்க மருத்துவ நோயியல் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமெரிக்க மருத்துவ நோயியல் சங்கம் (American Society for Clinical Pathology) அமெரிக்காவின் இலினோய் மாநிலத்தைச் சேர்ந்த சிக்காக்கோ நகரத்தில் அமைந்துள்ளது. தொழில்முறை சங்கமான இதில் மருத்துவ ஆய்வக அறிவியலாளர்கள் மற்றும் நோயியல் நிபுணர்கள் என 1,30,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

1922 ஆம் ஆண்டு அமெரிக்க மருத்துவ நோயியல் சங்கம் நிறுவப்பட்டது. நோயாளிகள், நோயியல் நிபுணர்கள் மற்றும் ஆய்வக வல்லுநர்கள் போன்றவர்களுக்கு கல்வி, சான்றிதழ் மற்றும் பரிந்துரைத்தல் போன்ற திட்டங்களை இச்சங்கம் வழங்குகிறது. கூடுதலாக ஏராளமான பாடப்புத்தகங்கள், செய்திமடல்கள் மற்றும் பிற கையேடுகளையும் வெளியிடுகிறது. இதைத்தவிர அமெரிக்க மருத்துவ நோயியல் செய்தி இதழ் மற்றும் ஆய்வக மருத்துவம் என்ற மேலும் இரண்டு தொழில்முறை செய்தி இதழ்களையும் இச்சங்கம் வெளியிடுகிறது. [1]

தேசிய மருத்துவ ஆய்வக வல்லுநர்கள் வாரம் என்ற ஒரு நிகழ்வையும் இச்சங்கம் நடத்துகிறது. மருத்துவ ஆய்வக பணியாளர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் நேரமாகவும், அவர்களின் நிபுணத்துவத்தை கொண்டாடுவதற்கான வாய்ப்பாகவும், அவர்களின் முயற்சிகளுக்கு அங்கீகாரமும் ஊக்கமும் அளிப்பதாகவும் இந்நிகழ்வு அமைகிறது. தேசிய ஆய்வக வாரம் ஆண்டுதோறும் ஏப்ரல் கடைசி முழு வாரத்தில் நடைபெற்று வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "History of ASCP". Archived from the original on 2009-01-09. பார்க்கப்பட்ட நாள் 2008-12-09.

புற இணைப்புகள்[தொகு]