அமெரிக்க நூலகம்
| புது தில்லியில் உள்ள அமெரிக்க நூலகம் | |
|---|---|
![]() | |
![]() | |
| முந்திய பெயர்கள் | அமெரிக்க தூதரகம் அலுவலகம் |
| பொதுவான தகவல்கள் | |
| இடம் | 24 கே.சி.மார்க், புது தில்லி |
| நாடு | இந்தியா |
| ஆள்கூற்று | 28°37′44″N 77°13′21″E / 28.628970°N 77.222450°E |
| கட்டுமான ஆரம்பம் | 1946 |
| உரிமையாளர் | அமெரிக்க தூதரகம், புது தில்லி |
| வலைதளம் | |
| http://newdelhi.usembassy.gov/americanlibrary.html | |
அமெரிக்க நூலகம் - புது தில்லி (American Library (New Delhi) என்பது அமெரிக்க தூதரகத்தின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் ஒரு நூலகமாகும். இது புது தில்லியின் வணிக மையத்தில் உள்ள அமெரிக்க அரசாங்க அதிகாரிகளின் அலுவலக மையத்திற்குள் அமைந்துள்ளது. 1951ஆம் ஆண்டில் இந்த நூலகம் திறக்கப்பட்டது. இந்திய மற்றும் அமெரிக்க மக்களுக்கு இடையே புரிதலை மேம்படுத்துவதற்காக இந்த நூலகம் நிறுவப்பட்டது. இந்த நூலகத்தில் அமெரிக்க சமூகம், அமெரிக்க அரசியல், அமெரிக்க கலாச்சாரம் மற்றும் அமெரிக்க அரசியலமைப்பு தொடர்பான தலைப்புகளில் புத்தகங்கள் உள்ளன. இப்புத்தகங்கள் பொது மக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு பயன்பட்டு வருகின்றது.[1]
வரலாறு
[தொகு]இந்த நூலகம், 54 குயின்சுவேயில் "யுனைடெட் சிடேட்ஸ் நூலகம்" என்ற பெயரில் ஒரு வாசிப்பு அறையாகத் தொடங்கப்பட்டது. அப்போது 3,000 நூல்கள், 2,000 துண்டுப் பிரசுரங்கள், 80 பருவ இதழ் சந்தாக்கள், 24 பேர் அமரும் வசதி இருந்தது. 1951-ஆம் ஆண்டில், நுல்களின் எண்ணிக்கை 6,000-ஐ எட்டியபோது, கடன் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இலவச உறுப்பினர் சேர்க்கை நீட்டிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தலைநகருக்கு வெளியே வசிப்பவர்களுக்கு அஞ்சல் மூலம் கடன் சேவைகள் வழங்கப்பட்டன. 1952 ஆம் ஆண்டில், இந்த நூலகம் 24 கர்சன் சாலைக்கு (தற்போது உள்ள கஸ்தூர்பா காந்தி மார்க் சாலை) மாற்றப்பட்டது. அந்த னேரத்தில் 10,000 புத்தகங்கள் மற்றும் 300 பருவ இதழ் சந்தாக்கள் இருந்து வந்தனன. 1969 ஆம் ஆண்டு முதல் 1974 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை, இந்த நூலகம் 1, சிகந்திரா சாலையில் உள்ள பகாவல்பூர் இல்லத்தில் தற்காலிகமாக இயங்கியது. 1971 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் இந்திய மக்களுக்கு ஆற்றிய தனது 25 ஆண்டுகால சேவையை இந்த நூலகம் கொண்டாடியது. வெள்ளி விழா கொண்டாட்டங்களுக்கு இந்தியத் துணை குடியரசுத் தலைவர், மறைந்த டாக்டர் கோபால் சுவரூப் பதக் அவர்கள் தலைமை தாங்கினார்.
1982 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், 7-ஆம் நாள் அமெரிக்க நூலகம் தனது முப்பத்தைந்தாவது ஆண்டு விழாவை, அப்போதைய இந்திய அரசின் தொழில், எஃகு, சுரங்கங்கள் துறைக்கான மத்திய இணை அமைச்சரான டாக்டர் சன்ரஞ்சித் சனனாவை[2] தலைமை விருந்தினராக அழைத்துக் கொண்டாடியது. அமைச்சர், நூலகம் வழங்கும் சேவைகளைப் பாராட்டினார், அதனை இந்திய நூலகர்களுக்கு ஒரு முன்மாதிரியாகக் குறிப்பிட்டார், மேலும் கூடுதல் சேவைகளுக்கான பரிந்துரைகளையும் வழங்கினார்.
மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தாவிலும் இதே போன்ற நூலகங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பழமையானது கொல்கத்தாவில் அமைந்துள்ளது,[3] இது 1943 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சென்னையின் நூலகம் 1947 ஆம் ஆண்டில் டேர் இல்லத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் ஒரு பகுதியாக, வெறும் 800 புத்தகங்களின் தொகுப்புடன் திறக்கப்பட்டது.
அமெரிக்கத் தூதர் செஸ்டர் பௌல்ஸ் இதை "இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஆழமான நட்பு மற்றும் நெருங்கிய உறவின் உச்சகட்டம்" என்று அழைத்தார்.[4]

இந்திய-அமெரிக்க உறவு
[தொகு]அமெரிக்க நூலகம் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நட்பின் அடையாளமாகும். நவீன இந்தியாவுடன் தூதர்களைப் பரிமாறிக்கொண்ட முதல் நாடு அமெரிக்கா. புது தில்லியில் அமைக்கப்பட்ட அமெரிக்க அரசாங்கத்தின் முதல் இராஜதந்திர அமைப்பு, 1941-ஆம் ஆண்டில் கொச்சின் இல்லத்தில் குடியரசு தலைவரின் தனிப்பட்ட அலுவலகம் ஆகும்.[5] இந்த அலுவலகம் 1943-ஆம் ஆண்டில் பகாவல்பூர் இல்லத்திற்கு மாற்றப்பட்டது.[5] 1947-ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, பகாவல்பூர் இல்லத்தில் ஒரு முழுமையான அமெரிக்க தூதரகம் நிறுவப்பட்டது. தூதரகம் 1959-ஆம் ஆண்டில் சாணக்கியபுரிக்கு மாற்றப்பட்டது.[6] புது தில்லியில் பத்து பள்ளிகளுக்கு 1000 புத்தகங்களை வழங்கும் விழாவின் போது, அமெரிக்க தூதர் திமோதி ஜே. ரோமரின் மனைவி, புத்தகங்கள் தற்போதைய அமெரிக்காவின் முதல் பெண்மணி மிசேல் ஒபாமாவுக்கும், இந்தியப் பிரதமரின் மனைவி திருமதி குர்சரன் கவுருக்கும் இடையிலான நட்பின் அடையாளம் என்று குறிப்பிட்டார்.[7]
சிறப்பம்சங்கள்
[தொகு]அமெரிக்கன் நூலகம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் காலத்தில்,[8] 350 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு சேவை செய்துள்ளது.[9] மேலும், புது தில்லியில் உள்ள முழுமையாக தானியங்கிமயமாக்கப்பட்ட அமெரிக்கன் லைப்ரரி கிளை, விரைவான தகவல் மீட்டெடுப்பு மற்றும் ஆன்லைன் மற்றும் குறுவட்டு சிடி தரவுத்தளங்களை வழங்குகிறது. இதன் மூலம் சுமார் 10,000 முழு உரை இதழ்களை அணுக முடியும். மேலும், சட்டம், வர்த்தகம், மேலாண்மை மற்றும் அமெரிக்க இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு பாடங்களில் 16,000 புத்தகங்கள் மற்றும் 150 அச்சுப் பருவ இதழ்களையும் இது வழங்குகிறது. இதன் டிவிடி தொகுப்பில் திரைப்படங்கள், தரவுகள் மற்றும் மென்பொருட்கள் உள்ளன, அவை புழக்கத்திற்கு கிடைக்கின்றன. நூலகப் பொருட்களைக் கண்டறிய புரவலர்களுக்கு உதவும் வகையில், நூலகம் ஒரு ஆன்லைன் பட்டியல் தரவுத்தளத்தை வழங்குகிறது.[10]

நிகழ்வுகள்
[தொகு]அமெரிக்க மையம் மற்றும் புது தில்லி அமெரிக்க நூலகம் இணைந்து பல கலாச்சார நிகழ்வுகளை நடத்துகின்றன, மேலும் ஒவ்வொரு வாரமும் அமெரிக்க சமூகம் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான நிகழ்வுகள் அல்லது முக்கிய விவாதங்களை இந்த மையம் ஏற்பாடு செய்கிறது. மிகவும் பிரபலமானவற்றில் ஒன்று வெள்ளிக் கிழமைகளில் ஃபிளிக்ஸ் ஆகும், இதில் மையம் தனது ஆடிட்டோரியத்தில் பொதுமக்களுக்கும் நூலக உறுப்பினர்களுக்கும் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தை வழங்குகிறது. பொதுவாக, ஒவ்வொரு மாதமும் ஒரு கருப்பொருள் உள்ள திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.[11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The American Library". US Embassy New Delhi. Archived from the original on 28 சூன் 2011. Retrieved 7 சூன் 2011.
- ↑ Government of India. "Indian Government". Central Government New Delhi.
- ↑ "The American Library". US Embassy New Delhi. Archived from the original on 19 சூலை 2011. Retrieved 1 சூலை 2011.
- ↑ "Chester Bowles in India: An Ambassdor's Agency Under Three Presidents" (PDF). Yale University. Archived from the original (PDF) on 28 செப்டெம்பர் 2011. Retrieved 15 சூலை 2011.
- 1 2 "Indo-American Relations: From Emergence into Strength" (PDF). Span Magazine. Archived from the original (PDF) on 1 July 2011. Retrieved 1 July 2011.
- ↑ "Indo-American Relations: From Emergence into Strength" (PDF). US Embassy New Delhi. Archived from the original (PDF) on 2011-07-01.
- ↑ "Press Releases 2011 Local students receive books from First Ladies". US Embassy New Delhi. [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "American Library in New Delhi Celebrates ..." (PDF). Span Magazine. Archived from the original (PDF) on 15 மே 2011. Retrieved 27 மே 2011.
- ↑ "Special collection of books in Hindi, now at the American Center". US Embassy New Delhi. Archived from the original on 16 சூலை 2011. Retrieved 6 சூன் 2011.
- ↑ "American Libraries in India: Catalog of library material available at Chennai, Kolkata, Mumbai and New Delhi". American library. Archived from the original on 31 May 2011. Retrieved 7 June 2011.
- ↑ "Hindustan times news". Hindustan times. Archived from the original on 25 January 2013.

