உள்ளடக்கத்துக்குச் செல்

அமெரிக்க சதுரங்க சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமெரிக்க சதுரங்க சங்கம் (American Chess Association) 1857 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க்கு நகரில் நிறுவப்பட்டது.[1][2] இச்சதுரங்க அமைப்பு 1857 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 ஆம் தேதியன்று அன்று அமெரிக்காவில் முதல் பெரிய சதுரங்கப் போட்டியான முதல் அமெரிக்க சதுரங்க காங்கிரசு போட்டியை ஏற்பாடு செய்தது.[3][4] 1857 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதியன்று போட்டியில் இலூயிசு பால்சனைத் தோற்கடித்த பால் மார்பிக்கு, பரிசளிப்பு விழாவில் அமெரிக்க சதுரங்க சங்கத்தின் தலைவரான கர்னல் சார்லசு டி. மீட் என்பவரால் ஒரு வெள்ளிப் பரிசுப் பொருள் வழங்கப்பட்டது.[5] பால் மார்பியின் சார்பாக, அமெரிக்க சதுரங்க சங்கம், சமீபத்தில் பட்டம் வென்ற அமெரிக்க சதுரங்க சங்க வாகையாளருடன் ஒரு போட்டியில் மோதுவதற்காக, ஐரோப்பாவில் உள்ள எந்தவொரு வீரருக்கும் 5,000 டாலர் பரிசு சவாலை முன்வைத்தது..[6]

அமெரிக்க சதுரங்க சங்கம் அமெரிக்க செஸ் மந்த்லி' என்ற மாத இதழை வெளியிட்டது. இது முதல் அமெரிக்க சதுரங்க காங்கிரசு போட்டியை ஏற்பாடு செய்ய உதவிய வில்லார்ட் பிசுக்கு என்பவரால் 1857 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் தொடங்கப்பட்டது.[7] 1857 முதல் 1860 வரை, இந்த இதழ் வெளியீடு நிறுத்தப்படுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு வரை, பத்திரிகையின் ஆசிரியராக இவரே இருந்தார். மார்பிக்கு இணை ஆசிரியர் என்ற பெருமை வழங்கப்பட்டது, இருப்பினும் அவருக்கு அதில் உண்மையான ஈடுபாடு குறைவாகவே இருந்தது. [8]1879-96 காலகட்டத்தில் வெளியிடப்பட்ட செஸ் மந்த்லி' என்ற மற்றொரு இதழுக்கு இதனுடன் எந்தத் தொடர்பும் இல்லை.

அந்த அமைப்பு சில ஆண்டுகளுக்குள் செயல்படுவதை நிறுத்திவிட்டது. மேலும் 1871 மற்றும் 1874-ஆம் ஆண்டுகளில் நிறுவப்பட்ட (மூன்றாவது அமெரிக்க சதுரங்க மாநாட்டை ஏற்பாடு செய்த) அதே பெயருடைய மற்ற அமைப்புகளுடன் ஒப்பிட்டு குழப்பிக் கொள்ளக்கூடாது. பிற்காலத்திய அமெரிக்க சதுரங்கக் சங்கம் 1939-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jordan Sprechman; Bill Shannon (1998). This Day in New York Sports. Sports Publishing LLC. pp. 280, 406. ISBN 1-57167-254-0.
  2. Bill Wall. "Strange But True". Bill Wall's Wonderful World of Chess. Archived from the original on April 27, 2005. Retrieved 2007-07-08.
  3. Who Was Who in America. Marquis Who's Who. 1967. p. 23.
  4. "October 6, 1857 in History". Brainy History. Retrieved 2007-07-28.
  5. C.A. Buck (1902). Paul Morphy : his later life. Newport, Ky.: Will. H. Lyons. கணினி நூலகம் 2393093. Archived from the original on 1 July 2007. Retrieved 2007-07-28.
  6. Frederick Milnes Edge (1859). The Exploits and Triumphs, in Europe, of Paul Morphy. D. Appleton & Company. p. 16.
  7. "1857 Chess Congress". Cornell Library. Retrieved 2007-07-28.
  8. Hooper, David; Whyld, Kenneth (1984). The Oxford Companion to Chess. Oxford University Press. p. 117. ISBN 0-19-217540-8.
  9. McCrary, John (January 2009). "Before the USCF: Early American Chess Associations". Chess Life.

மேலும் வாசிக்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமெரிக்க_சதுரங்க_சங்கம்&oldid=4472736" இலிருந்து மீள்விக்கப்பட்டது