அமெரிக்க காட்டெருதை சமவெளி பழங்குடிகள் பயன்படுத்திய வழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமவெளிப் பழங்குடிகள் மக்களின் வரலாற்றில், வாழ்வியலில், பொருளியலில், பண்பாட்டில், சமய நம்பிக்கைகளில் அமெரிக்கக் காட்டெருது முக்கிய இடத்தை வகிக்கிறது. உணவு, உடை, உறையுள், ஆயுதங்கள், பண்டமாற்று என பல்வேறு வழிகளில் அமெரிக்க காட்டெருதை சமவெளி பழங்குடிகள் பயன்படுத்தினர்.

வேட்டை[தொகு]

சமவெளிக் குடிகள் காட்டெருதுவை மிக நெடுங்காலமாக வேட்டையாடிப் பயன்படுத்தி வந்துள்ளார்கள். குதிரைகள் அறிமுகப்படுத்தப்பட முன்பு இந்தப் பெரிய விலங்குகளை பாறை விழிம்புகளுக்கு ஓடச் செய்து பாதாளத்தில் விளச் செய்து வேட்டையாடினர். சுற்றடைக்கப்பட்ட பகுதிகளுக்கு காட்டெருதுக்களை ஓட்டிவந்தும் வேட்டையாடினர்.

உடல் உறுப்புகள் வாரியாகப் பயன்பாடுகள்[தொகு]

காட்டெருதுவின் ஒவ்வொரு உறுப்பும் பயன்படுத்தப்பட்டது.[1]

தோல்[தொகு]

  • உடைகள் (சேட்டு, பட்டி, பனி மேல் அங்கி, மேலும் பல ...)
  • காலணிகள்
  • பைகள்
  • ரிபி கூரை
  • உறைகள்

மயிர்[தொகு]

  • தலைப்பாகை
  • தலையணி
  • கயிறு
  • அணிகலன்கள்
  • மருத்துவப் பந்து

வால்[தொகு]

  • சாட்டை
  • அலங்காரப் பொருட்கள்

குளம்பு & அடிகள்[தொகு]

  • பசை
  • கைக்கோடரி

கொம்பு[தொகு]

  • கிண்ணம்
  • கரண்டி
  • விளையாட்டுப் பொருட்கள்
  • வில்லின் பகுதிகள்
  • நெருப்புத் தாங்கிகள்

இறைச்சி[தொகு]

  • உணவாக
  • Pemmican
  • Jerky

பயன்பாடுகள்[தொகு]

உணவு[தொகு]

காட்டெருதே பழங்குடிகளின் மிக முக்கிய உணவாக இருந்தது.[2] இதன் இறைச்சி நெருப்பின் மீது வாட்டி உண்ணப்பட்டது. இறைச்சியை கீற்றுக்களாக (strips) வெட்டி, சூரிய ஒளியில் உலர்த்தி, இடித்து, காட்டெருதின் சூடான கொழுப்போடும் சதைக்கனிகளோடு (berries) சேர்த்து pemmican தயாரிக்கப்படும். உலர்த்தப்பட்ட இறைச்சி சூப்பாகவும் உண்ணப்படும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. How the Buffalo was used by the Plains Indians:
  2. The Plains People
  3. Plain Indians[தொடர்பிழந்த இணைப்பு]