உள்ளடக்கத்துக்குச் செல்

அமெரிக்கா–இந்தியா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறக்கட்டளை நிதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமெரிக்கா–இந்தியா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறக்கட்டளை நிதி (United States–India Science and Technology Endowment Fund) என்பது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வாயிலாகப் புதுமைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நிறுவப்பட்ட ஒரு கூட்டு நிதியாகும். [1] இந்நிதியானது இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது. மேலும், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான கூட்டுத் திட்டங்களுக்காக இது 500,000 டாலர் வரையிலான மானியங்களை வழங்குகிறது.[2]

வரலாறு

[தொகு]

அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையேயான ஒரு கூட்டு ஒப்பந்தத்தின் மூலம், 2009-ஆம் ஆண்டில் 'அமெரிக்க-இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறக்கட்டளை நிதி' நிறுவப்பட்டது.[3] இது ஆண்டுதோறும் சுமார் 2 முதல் 3 மில்லியன் டாலர் வரையிலான வரவுசெலவுத் திட்டத்தைக் கொண்டுள்ளது.[2][4] இரு நாடுகளையும் சார்ந்த உறுப்பினர்களைக் கொண்ட ஒரு வாரியம், அரையாண்டு அடிப்படையில் மானியங்களை வழங்குவதற்காக அமைக்கப்பட்டது. இவ்வாரியம், அமெரிக்க வெளியுறவுத் துறை மற்றும் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றின் வாயிலாக நிறுவப்பட்டது.[5]

2012 ஆம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் இலாரி கிளிண்டன் மற்றும் இந்தியாவின் முன்னாள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் விலாசுராவ் தேசுமுக்கு ஆகியோர், இநிதியத்தின் முதல் மானியம் பெறுநருக்கு விருதை வழங்கினர்.[2] இந்த முதல் மானியம் பெறுநர்களின் திட்டங்களில், விளைபொருட்களைப் பாதுகாப்பதற்கான குளிர்பதனச் சேமிப்பு வசதியை மேம்படுத்துவதில் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு முயற்சி; பச்சிளம் குழந்தைகளுக்கான வளர்சிதை மாற்றப் பரிசோதனை நடைமுறை; மற்றும் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு காலணி ஆகியவை அடங்கும்.[2]

நோக்கங்கள்

[தொகு]

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான அறிவியல் ஒத்துழைப்பை வளர்த்தல், புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை ஆதரித்தல், ஆராய்ச்சியை வணிகப் பயன்பாட்டிற்கு கொண்டு வர உதவுதல், சமூகப் பிரச்சினைகளுக்கு அறிவியல் தீர்வுகளை உருவாக்குதல் ஆகியன இந்நிதியின் நோக்கங்களாகும்.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]