அமெரிக்காவின் முடிவு: இளைய நாட்டுப்பற்றாளனுக்கு எச்சரிக்கை கடிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அமெரிக்காவின் முடிவு: இளைய நாட்டுப்பற்றாளனுக்கு எச்சரிக்கை கடிதம் (The End of America: A Letter of Warning to a Young Patriot) (ISBN 978-1933392790) நவோமி வோல்ஃப் (Naomi Wolf)என்பவரால் எழுதப்பட்ட ஒரு ஆங்கில புத்தகம்.

தற்கால அமெரிக்காவின் பாசிசப் போக்கைப் பற்றி எச்சரித்து இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. முன்னைய ஏகாதிபத்திய அரசுகளை ஆய்ந்து, தற்கால அமெரிக்காவின் போக்கை அவதானித்து இரண்டுக்கும் இருக்கும் ஒற்றுமைப்பாடுகளை விளக்கி இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

மக்களாட்சி பாசிசமாக மாறுவதற்கான 10 அறிகுறிகளை அல்லது படிநிலைகளை இந்த நூல் சுட்டியுள்ளது. அவை பின்வருமாறு:

  1. உள்ளக (துரோக) வெளியக எதிரிகளை காட்டி பயப்படுத்தல். - Invoke a terrifying internal and external enemy.
  2. இரகசிய சிறைச்சாலைகளை அமைத்து சித்தரவதையை அனுமதித்தல். Create secret prisons where torture takes place.
  3. இராணுவ ஒட்டுக் குழுக்களை அமைத்தல். - Develop a thug caste or paramilitary force not answerable to citizens.
  4. உள்ளக கண்காணிப்பு முறையை ஏற்படுத்தல். - Set up an internal surveillance system.
  5. மக்கள் குழுக்களையும் அமைப்புகளையும் துன்புறுத்தல் - Harass citizens' groups.
  6. விசாரணை/ஆதாரம் இன்றி கைது செய்தல். - Engage in arbitrary detention and release.
  7. முக்கிய நபர்களைக் குறிவைத்தல் - Target key individuals.
  8. ஊடகத்தை கட்டுப்படுத்தல் - Control the press.
  9. அரசியல் மாற்றுக் கருத்தோரை தீவரவாதிகளாக சித்தரித்தல் - Treat all political dissents to be traitors.
  10. சட்டத்தின் ஆட்சியை நிறுத்திவைத்தல். - Suspend the rule of law.

வெளி இணைப்புகள்[தொகு]