உள்ளடக்கத்துக்குச் செல்

அமெரிக்கன் எயர்லைன்சு பறப்பு 11

ஆள்கூறுகள்: 40°42′43.63″N 74°0′47.48″W / 40.7121194°N 74.0131889°W / 40.7121194; -74.0131889
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமெரிக்கன் ஏர்லைன்சு பறப்பு 11
American Airlines Flight 11
பாஸ்டன் முதல் நியூயார்க் வரையான பறப்பு
கடத்தல் சுருக்கம்
நாள்செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 11, 2001
சுருக்கம்பயங்கரவாதம் தற்கொலை கடத்தல்
இடம்அமெரிக்கா, நியூயார்க் நகரம், மன்ஹாட்டன் நகரில் உலக வணிக மையத்தின் வடக்கு கோபுரம்
40°42′43.63″N 74°0′47.48″W / 40.7121194°N 74.0131889°W / 40.7121194; -74.0131889
பயணிகள்81 (5 கடத்தல்காரர் உட்பட)
ஊழியர்11
உயிரிழப்புகள்92 (அனைவரும்), கிட்டத்தட்ட 1,600 அவசரப் பணியாளர்கள்
தப்பியவர்கள்0
வானூர்தி வகைபோயிங் 767
இயக்கம்அமெரிக்கன் எயர்லைன்ஸ்
வானூர்தி பதிவுN334AA
பறப்பு புறப்பாடுலோகன் பன்னாட்டு வானூர்தி நிலையம், பாஸ்டன்
சேருமிடம்லாசு ஏஞ்சலசு பன்னாட்டு வானூர்தி நிலையம்

அமெரிக்க எயர்லைன்சு பறப்பு 11 (American Airlines Flight 11) என்பது 2001 செப்டம்பர் 11 இல் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களின் ஒரு பகுதியாக ஐந்து அல் காயிதா தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட உள்ளூர் பயணிகள் விமானம் ஆகும். கடத்தல் காரனில் ஒருவனான முகம்மது அட்டா நியூயார்க் நகரின் உலக வணிக மையத்தின் வடக்குக் கோபுரத்தின் மீது வலுக்கட்டாயமாக செலுத்தி மோத வைத்ததில், கடத்தல்காரர் உட்பட அதிலிருந்த அனைத்து 92 பேரும் கொல்லப்பட்டனர். அத்துடன், கட்டடத்தில் இருந்த பெருந்தொகையானோரும் கொல்லப்பட்டனர். போயிங் 767 விமானம் அமெரிக்கன் எயார்லைன்சின் வழமையான தனது பாஸ்டனில் இருந்து லாஸ் ஏஞ்சலசு நோக்கி சென்று கொண்டிருந்தது.

வானூர்தி புறப்பட்டு 15 நிமிடத்தில் கடத்தல்காரர் மூவரைக் காயப்படுத்தினார் (ஒருவரைக் கொன்றும் இருக்கலாம்). பின்னர் விமானியறைக்குள் சென்று, விமானிகள் தலைவரையும், முதலாம் நிலை அதிகாரியையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அல்-கைதா உறுப்பினரும், விமான ஓட்டுநராகப் பயிற்சி எடுத்தவருமான ஆட்டா என்பவன் விமான அறையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். விமானிகளின் சமிக்கைகள் எதுவும் வராததான், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் விமானம் தமது கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணர்ந்தார்கள். பயணிகளுக்கு அட்டாவின் அறிவுறுத்தல்கள் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்களுக்கும் கேட்டதில், விமானம் கடத்தப்பட்டிருப்பதை அறிந்தார்கள். விமானத்தில் இருந்த விமானப் பணிப்பெண்கள் ஏமி சுவீனி, பெட்டி ஓங் ஆகியோர் அமெரிக்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்குத் தொடர்பை ஏற்படுத்தி, கடத்தல்காரர் பற்றியும், காயமடைந்தோர் பற்றியும் தெரிவித்தார்கள்.

இறுதியில், விமானம் உலக வணிக மையத்தின் வடக்குக் கோபுரத்தின் மீது 08:46:40 உள்ளூர் நேரத்திற்கு மோதியது. இக்காட்சியை நியூயார்க் நகரின் பல வீதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கண்டனர். ஆனாலும், மிகச் சிலரே இக்காட்சியைக் காணொளியாகப் பதிவு செய்தனர். யூலசு நோடெட் என்பவர் மோதுகையின் முழுக் காட்சியையும் காண்ளியாகப் படம் பிடித்திருந்தார். மோதுகையினால் ஏற்பட்ட தாக்கத்தினால், 102 நிமிடங்களில் கட்டடம் முழுவதும் இடிந்து வீழ்ந்தது. இதன் மூலம் நூற்றுக்கணக்கானோர் இறந்தனர்.

பறப்பு

[தொகு]

அமெரிக்கன் ஏர்லைன்சு பறப்பு11 வானூர்தி போயிங் 767-200ஈஆர் ரகம் 1987 இல் சேவைக்கு விடப்பட்டது.[1] இதில் 158 பயணிகள் பயணம் செய்ய முடியும். ஆனால், செப்டம்பர் 11 இல் 81 பயணிகளும் 11 பணியாளர்களும் இருந்தனர்.[2][3]

விமானத்தில் இருந்த அனைத்து 92 பேரும் கொல்லப்பட்டனர்.[4] இவர்களில் பிரேசியர் தொலைக்காட்சித் தொடரின் தயாரிப்பாளர் டேவின் ஏசல், அவரது மனைவி லின், நடிகை பெரி பெரென்சன் ஆகியோரும் அடங்குவர்.[5] நடிகர் மார்க் வால்பர்க் கடைசி நேரத்தில் தனது பயணத்தை ரத்துச் செய்தார்.[6]

கடத்தல்

[தொகு]
போர்ட்லாந்து விமானநிலையத்தில் அட்டா (நீலச் சட்டை), ஒமாரி இருவரும் செப்டம்பர் 11 இல் பாதுகாப்புக் கடவையைத் தாண்டிச் செல்கின்றனர்.

தாக்குதலின் தலைவர் முகம்மது அட்டா, மற்றும் அப்துலசீசு அல்-ஒமாரி இருவரும் போர்ட்லாந்து பன்னாட்டு விமான நிலையத்தை 2001 செப்டம்பர் 11 காலை 05:41 மணிக்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்து கோல்கன் எயார் விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்து பாஸ்டன் சென்றனர்.[2] எவ்விதப் பிரச்சினையும் இன்றி இருவரும் விமானத்தில் ஏறினர்.[7] மேலும் மூன்று கடத்தல்காரர்கள் வாலீத் அல்-சேரி, வைல் அல்-சுக்காமி, சதாம் அல்-சுக்காமி லோகன் விமானநிலையத்தை 06:45 மணிக்கு வந்தனர்.[2] 07:40 மணிக்கு ஐவரும் 07:"45 இற்குப் புறப்படவிருந்த விமானத்தில் ஏறினர்.[8] [9]

கடத்தல் நாடகம் 08:14 மணிக்குத் தொடங்கியது. கட்டுப்பாட்டு அறையுடனனான விமானிகளின் தொடர்பு அறுந்தது.[8] காப்டன் ஒகொனோவ்ஸ்கி கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டார்.[10][11] 08:16 மணிக்கு விமானம் வேறு திசையில் செல்லத் தொடங்கியது.[8] விமானப் பணிப்பெண் ஏமி சுவீனி கொடுத்த தகவலின் படி, பணிப்பெண்கள் கரென் மார்ட்டின், பார்பரா காயப்படுத்தப்பட்டனர். டேனியல் லெவின் என்ற பயணியின் கழுத்து வெட்டப்பட்டது.[12] வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் அட்டா பயணிகளுக்கு விடுத்த எச்சரிக்கையைக் கேட்க முடிந்தது.[13] 08:26 மணிக்கு, விமானம் தெற்கு நோக்கிப் பறக்கத் தொடங்கியது.[13]

இதே வேளையில் இரண்டு எஃப்-15 போர் விமானங்கள் 08:53 மணிக்குப் புறப்பட்டன.[8][14] ஆனால் அதற்கிடையில் 11 விமானம் வடக்குக் கோபுரத்தை மோதியிருந்தது.

பயணிகளின் தேசியம்

[தொகு]

குறிப்பு: கடத்தல்காரரின் தேசியம் இப்பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை.

தேசியம் பயணிகள் பணியாளர்கள் மொத்தம்
 ஐக்கிய அமெரிக்கா 71 11 82
 ஐக்கிய அமெரிக்கா மற்றும்  கொலம்பியா 2 0 2
 ஐக்கிய அமெரிக்கா மற்றும்  இசுரேல் 1 0 1
 லெபனான் மற்றும்  ஐக்கிய இராச்சியம் 1 0 1
 உருகுவை மற்றும்  ஆத்திரேலியா 1 0 1
மொத்தம் 76 11 87

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Brief of Accident". National Transportation Safety Board. March 7, 2006. Archived from the original (PDF) on May 31, 2010. பார்க்கப்பட்ட நாள் May 5, 2007.
  2. 2.0 2.1 2.2 "Staff Report – "We Have Some Planes": The Four Flights — a Chronology" (PDF). National Commission on Terrorist Attacks Upon the United States. Archived from the original (PDF) on October 24, 2012. பார்க்கப்பட்ட நாள் May 25, 2008.
  3. "American Airlines Flight 11". CNN. 2001 இம் மூலத்தில் இருந்து May 16, 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080516104740/http://www.cnn.com/SPECIALS/2001/trade.center/victims/AA11.victims.html. பார்த்த நாள்: May 22, 2008. 
  4. Lagos, Marisa; Walsh, Diana (September 11, 2006). "S.F. firefighters, others honor peers who died on 9/11". San Francisco Chronicle இம் மூலத்தில் இருந்து March 14, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120314224031/http://www.sfgate.com/cgi-bin/article.cgi?f=%2Fc%2Fa%2F2006%2F09%2F11%2FMNGM0L3EBG20.DTL. பார்த்த நாள்: May 23, 2008. 
  5. "American Airlines Flight 11 – Victims". CNN இம் மூலத்தில் இருந்து May 16, 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080516104740/http://www.cnn.com/SPECIALS/2001/trade.center/victims/AA11.victims.html. பார்த்த நாள்: June 6, 2008. 
  6. "Mark Wahlberg sorry for saying he would have thwarted 9/11 terrorists". Fox News. January 18, 2012 இம் மூலத்தில் இருந்து November 2, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131102202329/http://www.foxnews.com/entertainment/2012/01/18/mark-wahlberg-said-would-have-defeated-11-terrorists-on-flight-3/. 
  7. "Extract: 'We have some planes'". BBC News. July 23, 2004 இம் மூலத்தில் இருந்து December 16, 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081216072328/http://news.bbc.co.uk/2/low/americas/3919613.stm. பார்த்த நாள்: May 22, 2008. 
  8. 8.0 8.1 8.2 8.3 "'We Have Some Planes'". National Commission on Terrorist Attacks Upon the United States. July 2004. Archived from the original on May 11, 2008. பார்க்கப்பட்ட நாள் May 25, 2008.
  9. "9/11 Investigation (PENTTBOM)". புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம். United States Department of Justice. September 2001. Archived from the original on May 14, 2008. பார்க்கப்பட்ட நாள் May 22, 2008.
  10. Kifner, John (September 13, 2001). "AFTER THE ATTACKS: AMERICAN FLIGHT 11; A Plane Left Boston and Skimmed Over River and Mountain in a Deadly Detour". New York Times. https://www.nytimes.com/2001/09/13/us/after-attacks-american-flight-11-plane-left-boston-skimmed-over-river-mountain.html. பார்த்த நாள்: March 30, 2018. 
  11. Toby Harnden (2001-09-13). "Hijackers reassured pilot while they stabbed stewardesses". த டெயிலி டெலிகிராப். பார்க்கப்பட்ட நாள் 2010-03-10. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  12. "Excerpt: A travel day like any other until some passengers left their seats". The Seattle Times. July 23, 2004 இம் மூலத்தில் இருந்து November 19, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111119033249/http://seattletimes.nwsource.com/html/nationworld/2001986488_planes23.html. பார்த்த நாள்: May 23, 2008. 
  13. 13.0 13.1 "Flight Path Study – American Airlines Flight 11" (PDF). National Transportation Safety Board. February 19, 2002. Archived from the original (PDF) on February 1, 2009. பார்க்கப்பட்ட நாள் May 25, 2008.
  14. "9/11 recordings chronicle confusion, delay". CNN. June 17, 2004 இம் மூலத்தில் இருந்து October 29, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131029211001/http://edition.cnn.com/2004/ALLPOLITICS/06/17/911.transcript/. பார்த்த நாள்: May 24, 2008. 

வெளி இணைப்புகள்

[தொகு]
வெளிப் படிமங்கள்
Picture of aircraft Pre 9/11