அமெரிக்கக் குள்ளநரி
அமெரிக்கக் குள்ளநரி புதைப்படிவ காலம்: Middle Pleistocene – present (0.74–0.85 Ma):p131 | |
---|---|
மலைவாழ் அமெரிக்கக் குள்ளநரி (C. l. lestes) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
Modern range of Canis latrans | |
வேறு பெயர்கள் [2] | |
பட்டியல்
|
அமெரிக்கக் குள்ளநரி (Coyote) என்பது "கேனிசு" என்னும் பேரினத்தைச் சார்ந்த ஒரு விலங்கு ஆகும். இது வட அமெரிக்கா, நடு அமெரிக்கா ஆகிய பிரதேசங்களில் தெற்கே பனாமாவிலிருந்து வடக்கே மெக்சிக்கோ வரை, ஐக்கிய அமெரிக்க நாடுகள், கானடா ஆகிய பகுதிகள் உட்பட காணக்கிடக்கின்றது.[3]
பார்ப்பதற்கு ஓநாய்கள் போலவே தோற்றம் அளித்தாலும் இவை வேறு இனத்தைச் சார்ந்தவை. கயோட்டி என்னும் பெயர் அமெரிக்கப் பழங்குடிகளில் ஒரு இனமாகிய ஆசுடெக் மக்களீன் நஃஉவாட்டில் (Nahuatl) மொழியில் இருந்து பெறப்பட்டது. சராசரியாக ஆறு கயோட்டிகள் சேர்ந்து நடமாடினாலும்.அவை இரண்டாகச் சேர்ந்து வேட்டையாடுவதுதான் வழக்கம். ஆனால் ஓநாய்கள் பெரிய கூட்டமாகச் சென்று வேட்டையாடும். கயோட்டிக் கோநாய்கள், தாம் வேட்டையாடும் நிலப்பகுதியை பெரிதும் விரிவுபடுத்தியுள்ளன. மனிதர்கள் இக்கயோட்டிகளைக் பெருமளவில் கொன்றிருந்தும் இப்படி இக்கயோட்டிகள் தம் வேட்டை நிலப்பகுதியை பெருக்கி உள்ளது குறிப்பிடத்தகுந்தது. கயோட்டியின் முகமும் வாயும் சற்று நீண்டு காணப்படும். கயோட்டி கோநாய்களுக்கும் பெரிய எதிரிகளில் சாம்பல் நிற ஓநாய்கள் (Grey wolf) முக்கியமானவை.
ஆதாரங்கள்
[தொகு]- "Canis latrans". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).
- ↑ Sillero-Zubiri; Hoffmann (2008). "Canis latrans". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்.
- ↑ "Canis latrans". Fossilworks.org. Archived from the original on 8 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 5 September 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ அமெரிக்கக் குள்ளநரி
வெளி இணைப்புகள்
[தொகு]- தென் கன்மலைகளில் கயோட்டிகள் பரணிடப்பட்டது 2008-05-15 at the வந்தவழி இயந்திரம்
- இண்டியானா மாநில கயோட்டி காப்பு நடுவணகம்
- கயோட்டி அசைபடம் Mooncusser Films.
- மோ'சாவே பாலையில் கயோட்டியின் உணவுப் படி
- ஸ்ட்செப்டெக்வ்லே(Stseptekwle) கதைகள் பரணிடப்பட்டது 2004-11-19 at the வந்தவழி இயந்திரம்