உள்ளடக்கத்துக்குச் செல்

அமெரிக்கக் கதிரியக்கவியல் பெண்கள் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமெரிக்கக் கதிரியக்கவியல் பெண்கள் சங்கம்
உருவாக்கம்1981; 45 ஆண்டுகளுக்கு முன்னர் (1981)
வலைத்தளம்www.aawr.org

அமெரிக்கக் கதிரியக்கவியல் பெண்கள் சங்கம் (American Association for Women in Radiology) என்பது 1981 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நிறுவப்பட்ட ஒரு தொழில்முறை சங்கம் ஆகும். இச்சங்கம் கதிரியக்கவியல், கதிரியக்கப் புற்றுநோய் சிகிச்சை, அணுக்கரு மருத்துவம் போன்ற துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு ஆதரவு வழங்குகிறது. பெண்கள் கதிரியக்க மருத்துவத் துறையில் முன்னேறுவதற்கு தேவையான வழிகாட்டுதல், தலைமைத்துவ பயிற்சி, கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி வாய்ப்புகளை இச்சங்கம் வழங்குகிறது. கதிரியக்க மருத்துவத் துறையில் பெண்கள் எதிர்கொள்ளக்கூடிய சவால்களை சமாளிக்க உதவுவதோடு, அவர்களை தலைமைப் பொறுப்புகள் மற்றும் ஆராய்ச்சி துறைகளில் அதிகமாக ஈடுபடவும் ஊக்குவிக்கிறது.[1][2][3]

மேரி கியூரி அமெரிக்கக் கதிரியக்கவியல் பெண்கள் சங்கத்தின் முன்மாதிரியாகக் கருதப்படுகிறார்.[1][2]

கதிரியக்கவியல், கதிர்வீச்சு புற்றுநோயியல் மற்றும் அது சார்ந்த துறைகளில் உள்ள பெண்களுக்குரிய தனித்துவமான பிரச்சினைகளை விவாதிக்க ஒரு தளத்தை அமைத்தல், பெண்களுக்கான வாய்ப்புகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளை நடத்துதல் மற்றும் பெண் கதிரியக்க நிபுணர்களுக்கு இடையிலான தொடர்புகளை எளிதாக்குதல் ஆகியவை இச்சங்கத்தின் முக்கிய நோக்கங்களாகும்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 Angtuaco, Teresita L.; Macura, Katarzyna J.; Lewicki, Ann M.; Rosado-de-Christenson, Melissa L.; Rumack, Carol M. (1 March 2008). "The American Association for Women Radiologists (AAWR): 25 Years of Promoting Women in Radiology". RadioGraphics 28 (2): 573–582. doi:10.1148/rg.282075132. பன்னாட்டுத் தர தொடர் எண்:0271-5333. பப்மெட்:18349459.
  2. 1 2 3 "American Association for Women Radiologists (AAWR) Celebrates Its 25th Anniversary" (in en). www.radiologyinfo.org. https://www.radiologyinfo.org/en/news/target.cfm?ID=311.
  3. ↑ "Women in Radiology Leadership" (in en-us). www.appliedradiology.com. https://www.appliedradiology.com/articles/women-in-radiology-leadership.