அமெக்கினைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமெக்கினைட்டு
Ameghinite
பொதுவானாவை
வகைநெசோபோரேட்டுகள்
வேதி வாய்பாடுNaB3O3(OH)4
இனங்காணல்
படிக அமைப்புஒற்றைச் சரிவச்சு

அமெக்கினைட்டு (Ameghinite) என்பது Na[H4B3O7] அல்லது NaB3O3(OH)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும்[1][2]. அர்கெந்தீனா நாட்டில் இக்கனிமம் கிடைக்கிறது. மோவின் அளவு கோலில் இதன் கடினத்தன்மை மதிப்பு 2-3 ஆகும். ஒற்றைச் சரிவச்சு படிகத்திட்டத்தில் இக்கனிமம் படிகமாகிறது.

அர்கெந்தீனாவின் சால்ட்டா[3] நகருக்கு அருகில் முதன்முதலாக அமெக்கினைட்டு கண்டறியப்பட்டது. அர்கெந்திய நிலவியல் சகோதரர்கள் கார்லோசு அமெக்கினோ (1865–1936) மற்றும் புளோரென்டினோ அமெக்கினோ ஆகியோர் நினைவாக கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது[1].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமெக்கினைட்டு&oldid=2609147" இலிருந்து மீள்விக்கப்பட்டது