அமுலரியா ஆஸ்டோயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமுலரியா ஆஸ்டோயா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. ostoyae
இருசொற் பெயரீடு
Armillaria ostoyae
(Romagnesi) Henrik (1973)
வேறு பெயர்கள்

Agaricus congregatus Bolton 1791 nom. illeg.
Armillaria mellea var. obscura Gillet 1874
Armillariella ostoyae Romagn. 1970 nom. cons.
Armillaria solidipes Peck 1900 nom. rej.

அமுலரியா ஆஸ்டோயா என்ற தேன் காளான் (Armillaria ostoyae (sometimes called Armillaria solidipes) என்பது பிசலாலிரியேசே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு காளான் வகை ஆகும். இது மேற்கு ஐக்கிய அமெரிக்காவில் மிகவும் பொதுவாக காணப்படக் கூடிய காளான்களான, அன்னைலரியா மெல்லேயா இந்த இனத்தவை பகிர்ந்து கொள்கின்றன. 

அமெரிக்காவின் கிழக்கு ஓரிகன் மலைப் பகுதிகளில் உள்ள தேசிய வனப்பகுதியில் இந்த தேன் காளான்.  3.4 சதுர மைல்கள் (2,200 ஏக்கர்கள்; 8.8 km2) நிலப்பரப்பில் மிகப்பெரிய உயிரினமாக பரந்து விரிந்திருக்கின்றன. இவை அனைத்தும் கண்களுக்குத் தெரியாத ஒரே ஒரு வித்திலிருந்துதான் உருவாகியிருக்கின்றன என்கிறார்கள் அறிவியலாளர்கள். இந்தக் காளான் உருவாகி குறைந்தது 2,400 ஆண்டுகள்  ஆகியிருக்கலாம் என்கிறார்கள். இந்த காளான் தொகுப்புக்கு  "Humongous Fungus".[1]  என்று பெயரிட்டுள்ளனர். இந்த காளான்கள் மெதுவாகப் படர்ந்து, தான் செல்லும் வழியில் உள்ள தாவரங்களைக் கொன்றுவிடுகின்றன. ஒவ்வோர் இலையுதிர் காலத்தின்போதும் மஞ்சள் வண்ணக் காளான்களாகக் கூட்டம் கூட்டமாகத் தங்கள் இருப்பை வெளிக்காட்டிக்கொள்கின்றன. ஒரு சில வாரங்களில் தங்களுடைய உருவத்தை மாற்றி, வெள்ளை நிறமாக மாறி சுண்ணாம்புபோல் சாதாரணமாகக் காட்சியளிக்கின்றன. இந்தத் தேன் காளான்கள் மரங்களுக்கு மிகப் பெரிய ஆபத்தை விளைவித்துவிடுகின்றன. மரத்தின் வேர்களில் இருந்து சத்தை மெதுவாக உறிஞ்சி தங்களை வளர்த்துக்கொள்கின்றன. இதனால் மரங்கள் மெதுவாக சத்துகளை இழக்க ஆரம்பிக்கின்றன. 20, 30 ஆண்டுகளில் தேன் காளான்களை எதிர்த்து நிற்க முடியாமல் இறக்கும் நிலைக்கு சென்றுவிடுகின்றன.[2][3]

இதே தேன் காளான்கள் அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியிலும் ஜெர்மனியிலும் உள்ளன. ஆனால் ஓரிகனில் வாழ்வதுபோல் அவை மிகப் பெரிய உயிரினமாகவும், மிகப் பழமையான உயிரினமாகவும் இல்லை.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Richardson Dodge, Sherri (24 July 2000). "An Even More Humongous Fungus". Pacific Northwest Research Station, US Forest Service. http://www.fs.fed.us/pnw/news/fungus.htm. பார்த்த நாள்: 2 November 2015. 
  2. "Biggest Living Thing". Extreme Science. 1 Dec 2010.
  3. Puiu, Tibi (6 February 2015). "The largest organism in the world". ZME Science. பார்க்கப்பட்ட நாள் 20 February 2015.
  4. "கொலைகாரக் காளான்கள் இயற்கையின் விந்தை!". செய்திக் கட்டுரை. தி இந்து தமிழ். 23 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 30 நவம்பர் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமுலரியா_ஆஸ்டோயா&oldid=3576444" இலிருந்து மீள்விக்கப்பட்டது