அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் அல்லது குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் என்பது சிவஞான முனிவரால் இயற்றப்பட்ட பிள்ளைத்தமிழ் நூலாகும். இந்நூல் குளத்தூர்ப் பிள்ளைத்தமிழ் எனவும் அறியப்பெறுகிறது. காப்புப் பருவம், செங்கீரைப் பருவம், தாலப் பருவம், சப்பாணிப்பருவம், முத்தப் பருவம், வாரானைப் பருவம், அம்புலிப் பருவம், அம்மானைப் பருவம், நீராடற் பருவம், ஊசற் பருவம் என பத்து பருவங்களையும், நூற்றிமூன்று (103) செய்யுள்களையும் கொண்டது. இந்நூலை திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் எனும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்பு திட்டத்தின் மூலம் இணையப்படுத்தப்பட்டுள்ளது.

காண்க[தொகு]

ஆதாரம்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

http://www.projectmadurai.org.vt.edu/pm_etexts/utf8/pmuni0310.html பரணிடப்பட்டது 2016-01-16 at the வந்தவழி இயந்திரம் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்