அமுண்ட்சென் கடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அண்டார்டிகாவின் அமுண்ட்சென் கடல் பகுதி
அண்டார்டிக் பனிப்பாறை, அமுண்ட்சென் கடல்

அமுண்ட்சென் கடல் (Amundsen Sea) என்பது மேற்கு அந்தாட்டிக்காவில் உள்ள மேரி பைர்ட் லேண்டிலிருந்து தென்முனைப் பெருங்கடலின் ஒரு துணைக் கடல் பகுதி ஆகும். இதன் கிழக்கே பறக்கும் மீன் முனை ( தர்ஸ்டன் தீவின் வடமேற்கு முனை) மற்றும் மேற்கில் சிப்பிள் தீவில் உள்ள டார்ட் முனை ஆகியவற்றின் இடையே அமைந்துள்ளது. இதன் எல்லையானது பறக்கும் மீன் முனை அமுண்ட்சென் கடல் மற்றும் பெல்லிங்ஷவுசன் கடலுக்கு இடையிலான எல்லையை கொண்டுள்ளது. டார்ட்டு முனைக்கு மேற்கே அமுண்ட்சென் மற்றும் ரோஸ் கடல்களுக்கு இடையில் தென்முனைப் பெருங்கடலின் பெயரிடப்பட்ட கடல் இல்லை. கேப்டன் நில்ஸ் லார்சனின் தலைமையில் 1928-1929 ஆம் ஆண்டு நோர்வே நாட்டினரின் பயணத்தின்போது, 1929 பிப்ரவரியில் இந்த பகுதியை ஆராய்ந்தபோது நோர்வே துருவ ஆய்வாளர் ரோல்ட் அமுண்ட்சனின் நினைவாக இப்பகுதியிக்கு பெயரிட்டது. [1]

இந்தக் கடல் பெரும்பாலும் பனியால் மூடப்பட்டுள்ளது. மேலும் திவைட்ஸ் பனி நாக்கு அதில் நீண்டுள்ளது . அமுண்ட்சென் கடலுக்குள் பாயும் பனிவிரிப்பு சராசரியாக 3 km (1.9 mi) தடிமன் கொண்டது; ஏறக்குறைய டெக்சாஸ் மாநிலத்தின் அளவு, இந்த பகுதி அமுண்ட்சென் கடல் உறைவிடம் (ASE) என்று அழைக்கப்படுகிறது; இது மேற்கு அண்டார்டிக் பனிக்கட்டியின் மூன்று பெரிய பனி வடிகால் படுகைகளில் ஒன்றாகும்.

அமுண்ட்சென் கடல் விரிகுடாவாக்கம்[தொகு]

திவைட்ஸ் பனிப்பாறையில் இருந்து பெரிய பி -22 பனிப்பாறை மற்றும் பைன் தீவு விரிகுடாவில் உள்ள பைன் தீவு பனிப்பாறையில் இருந்து பி -21 பனிப்பாறையின் எச்சங்கள் படத்தின் வலதுபுறம்

அமுண்ட்சென் கடலுக்குள் பாயும் பனிவிரிப்பு சராசரியாக 3 km (1.9 mi) தடிமன் கொண்டது; டெக்சாஸ் மாநிலத்தின் தோராயமாக அளவு மற்றும் இப்பகுதி அமுண்ட்சென் கடல் உறைவிடம் (ASE) என அழைக்கப்படுகிறது; இது மேற்கு அண்டார்டிக் பனிக்கட்டியின் மூன்று பெரிய பனி வடிகால் படுகைகளில் ஒன்றாகும், மற்றவை ரோஸ் கடல் விரிகுடா மற்றும் வெடெல் கடல் விரிகுடாவாக்கம். மார்ச் 2007 இல், செயற்கைக்கோள் மற்றும் வான்வழி ஆய்வுகள் மூலம் ASE ஐ ஆராயும் அறிவியலாளர்கள் ASE தடிமன் குறிப்பிடத்தக்க அளவு மெல்லியதாகிவருவதாக அறிவித்தனர். காரணம் காற்றின் வடிவங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக வெப்பமான நீர் பனிக்கட்டிக்கு அடியில் பாயும் நிலை ஏற்பட்டது ஆகும்.

சில அறிவியலாளர்கள் இந்த பகுதி மேற்கு அண்டார்டிக் பனிக்கட்டியின் "பலவீனமான அடித்தொப்பையாக" இருக்கலாம் என்று முன்மொழிந்தனர். அமுண்ட்சென் கடலில் பாயும் பைன் தீவு மற்றும் திவைட்ஸ் பனிப்பாறைகள், அண்டார்டிகாவின் மிகப்பெரிய ஐந்து பனிப்பாறைகளில் இரண்டு ஆகும். இந்த பனிப்பாறைகளின் ஓட்டம் அண்மைய ஆண்டுகளில் அதிகரித்துள்ளது என்று அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர், அவை முழுமையாக உருகினால் உலக கடல் மட்டத்தில் சுமார் 0.9–1.9   மீ (1-2   யார்டுகள்) ஆக உயரும் என்கின்றனர். இந்த பனிப்பாறைகளின் கரைவானது முழு மேற்கு அண்டார்டிக் பனிக்கட்டியையும், கிழக்கு அண்டார்டிக் பனிக்கட்டியின் சில பகுதிகளையும் சீர்குலைக்கும் என்று அறிவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். [2]

20004 அக்டோபரில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், அமுண்ட்சென் கடலில் பனி வேகமாக உருகி விரிசல்கள் மிகுதியானால், கடல் பனி அடுக்கு "ஐந்து ஆண்டுகளுக்குள்" சரிந்துவிடும் என்று கூறப்பட்டது. மேலும் அமுண்ட்சென் கடலில் உள்ள முழு கடல் பனிப் பாறைகளும் உருகினால் மேற்கு அண்டார்டிக் பனிக்கட்டியிலிருந்து கடல் மட்டம் 1.3 மீ (4.3 அடி) உயரும் என்று ஆய்வு கணித்துள்ளது. [3]

குறிப்புகள்[தொகு]

  1. "Amundsen Sea". Geographic Names Information System. United States Geological Survey. Retrieved 23 October 2011.
  2. Pearce, Fred (2007). With Speed and Violence: Why scientists fear tipping points in climate change. Beacon Press Books. ISBN 978-0-8070-8576-9.
  3. Flannery, Tim F. (2006). The Weather Makers: How man is changing the climate and what it means for life on Earth. HarperCollins. p. 356. ISBN 978-0-00-200751-1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமுண்ட்சென்_கடல்&oldid=3812711" இருந்து மீள்விக்கப்பட்டது