அமுண்ட்சென்-ஸ்காட் தென் துருவ நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமுண்ட்சென்-ஸ்காட் தென் துருவ நிலையம், அண்டார்டிக்காவில், தென் துருவப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய அமெரிக்காவின் ஆய்வு நிலையம் ஆகும்.

விபரமும் வரலாறும்[தொகு]

மனிதர்கள் தொடர்ச்சியாக வாழும், புவிக் கோளத்தின் தென்கோடியில் உள்ள இடம் அமுண்ட்சென்-ஸ்காட் தென் துருவ நிலையம் ஆகும். இப்பெயர், டிசம்பர் 1911 ஆம் ஆண்டில் முதன்முதலில் தென் துருவத்தை அடைந்த அமுண்ட்சென்-ஸ்காட்டினதும், அதற்கு ஒரு மாதத்துக்குப் பின் அங்கு சென்ற ராபர்ட் எஃப். ஸ்காட் என்பவரதும் பெயர்களைத் தழுவி அமைந்தது. இது 1957 ஆம் ஆண்டில் கொண்டாடப்படவிருந்த அனைத்துலக புவியியற்பியல் ஆண்டுக்காக இந் நிலையம் 1956 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. அன்றிலிருந்து தொடர்ச்சியாக மனிதர்கள் இங்கேயிருந்து பணிபுரிந்து வருகின்றனர். இது தற்போது, புவியியற் தென் முனையில் இருந்து 100 மீட்டர்களுக்குள் உள்ளது.