அமீனா ஹுசைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அமீனா ஹுசைன்
தொழில் நாவலாசிரியர், சிறு கதை எழுத்தாளர், சமூக ஆர்வலர், ஆசிரியர், சமூகவியல், வெளியீட்டாளர்
நாடு இலங்கை

அமீனா ஹுசைன் (Ameena Hussein) 1964இல் இலங்கையில் பிறந்த ஒரு சமூகவியலாளர், நாவலாசிரியர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவரது படைப்புகளில் "பிப்ட்டீன்" மற்றும் " ஜில்ஜி" போன்றவை குறிப்பிடத்தக்கவை.[1][2]

சுயசரிதை[தொகு]

அமீனா ஹுசைன் 1964 இலங்கையில் கொழும்பிலுள்ள கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் பிறந்தார். அவரது தந்தை மதி ஹுசைன் ஒரு வழக்கறிஞர் அவரது தாய் மரீனா கபூர் ஆவார். அமீனாவுக்கு ஒரு இளைய சகோதரி உள்ளார். இத்தம்பதிகளின் இரு புதல்விகளுக்கும் இள வயதிலேயே வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தி திறமையை வளர்ப்பதில் அக்கறை செலுத்தினர். அமீனா கொள்ளுப்பிட்டியில் உள்ள புனித பிரிஜட் கன்னியர் மடத்தில் கல்வியை தொடர்ந்தார். இவர் கல்வியில் மெல்ல கற்பவராகவே இருந்தார்.[3]

இலக்கியத்துறை[தொகு]

அமீனா ஹுசைன் இயல்பாகவே மெல்ல எழுதுபவராக இருந்தார். இதனால் இவரது முதலாவது நாவலான "தி மூன் இன் தி வாட்டர்" என்பதை எழுத எட்டு ஆண்டுகள் எடுத்துக்கொண்டார். அவரது முதலாவது நாவல் சர்வதேச அங்கீகாரத்தை வென்றது. ஆசிய இலக்கியப் பரிசு (2007) பட்டியலிலும் அது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.[4][5] இவரின் இரு சிறுகதைத் தொகுதிகள் விருதுகளைப் பெற்றது. அவை " பிப்ட்டீன்" மற்றும் " ஜில்ஜி" ஆகும். " பிப்ட்டீன்" 1999 இல் கிரேட்டியன் விருதிற்காக பட்டியலிடப்பட்டு, அதே ஆண்டில் சர்வதேச டப்ளின் இலக்கிய விருதிற்கும் பரிந்துரைக்கப்பட்டது. சிறுகதைகள் எழுதுவதோடு தவிர "மில்க் ரைஸ்", "மில்க் ரைஸ் 2 " மற்றும் "தி வாம்பயர் அம்பயர்"' போன்ற குழந்தைகளுக்கான நூல்களையும் ஹுசைன் வெளியிட்டுள்ளார்.[6]

சமூகப்பணி[தொகு]

அரசு அல்லாத பல சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளுக்கு ஆலோசகராகப் பணிபுரிந்தார். குறிப்பாக, அவர் "சம் டைம்ஸ் தேர் ஈஸ் நோ பிளட் என்ற அமைபிற்கு ஆசிரியராக இருந்தார், இது சர்வதேச ஆய்வு மையம் மூலம் கிராமப்புற பெண்களைக் கணக்கெடுக்கும் அமைப்பாகும்.[7] 2003 ஆம் ஆண்டில், இலங்கையில் எதிர்கால மற்றும் எழுச்சி எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காக அவர் தனது கணவர் சாம் பெரேராவுடன் இணைந்து பெரேரா-ஹுசைன் பப்ளிஷிங் ஹவுஸ் என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.[8][9]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமீனா_ஹுசைன்&oldid=2784355" இருந்து மீள்விக்கப்பட்டது