உள்ளடக்கத்துக்குச் செல்

அமீனா அகமது அஹுஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமீனா அகமது அஹுஜா
பிறப்புஇந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்ஸ்லேட் கலைப் பள்ளி
பணிஓவியர்
கலைஎழுத்தர்
மொழியியலாளர்
எழுத்தாளர்
அறியப்படுவதுஎழுத்துக்கலை ஓவியங்கள்
பெற்றோர்[நூருதீன் அகமது]]
வாழ்க்கைத்
துணை
விஷ்ணு அஹுஜா
விருதுகள்பத்மஸ்ரீ
வலைத்தளம்
Website

அமீனா அகமது அஹுஜா (Ameena Ahmad Ahuja) இந்திய ஓவியர், எழுத்தோவியக் கலைஞர், எழுத்தாளர் மற்றும் மொழியியலாளர் ஆவார். உருது கவிதைகளால் ஈர்க்கப்பட்ட ஓவியங்களுக்காக இவர் அறியப்படுகிறார். இந்திய அரசால் 2009 ஆம் ஆண்டு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

அமீனா அகமது அஹுஜா ஒரு பிரித்தானியத் தாயாருக்கும் வழக்கறிஞரும் இலக்கிய அறிஞருமான நூருதீன் அகமதுக்கும் மகளாகப் பிறந்தார். இவர் இலண்டனிலுள்ள ஸ்லேட் கலைப் பள்ளியில் கலைப் பயிற்சி பெற்றார்.[1]இவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ரஷ்ய மொழித்துறையில் ஆசிரியராக பணியாற்றினார். ரஷ்ய மொழியுடன் பாரசீகம், செருமானியம், பிரெஞ்சு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.[2]இவரது பணியியல் காலத்தில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கவிதை விரிவுரையாளராகவும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்து பணியாற்றும் கலைஞராகவும் இருந்தார்.இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இவரது ஓவியக் கண்காட்சிகள் நடைபெற்றன. மாஸ்கோ, டோக்கியோ, வெனிசுவேலா, கொலம்பியா மற்றும் நியூயார்க் போன்ற இடங்களில் இவரது படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.[3][4]சோவியத் தலைவர்களான அலெக்சி கோசிகின், நிக்கொலை பல்கானின், நிக்கிதா குருஷ்சேவ் மற்றும் லியோனிட் பிரெஷ்னெவ் ஆகியோர் இந்தியா வந்தபோது அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார்.இவர் முன்னாள் தூதுவரான விஷ்ணு அஹுஜாவை திருமணம் செய்துகொண்டார். கணவருடன் பல நாடுகளுக்கு பயணம் செய்யும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது.

நூல்

[தொகு]

இவர் இசுலாமிய எழுத்தோவியம் என்ற உருது நூலை எழுதியுள்ளார். இது 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.[5]

விருதுகள்

[தொகு]

இந்திய அரசு கலைத்துறைக்கான பங்களிப்பிற்காக 2009 ஆம் ஆண்டு இவருக்கு பத்மசிறீ விருதை வழங்கியது.[6]

மேலும் படிக்க

[தொகு]
  • Ameena Ahmed Ahuja (2009). Calligraphy in Islam. Penguin India. p. 120. ISBN 9780670082605.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Sharma, Parul (17 May 2007). "Amazing synthesis of art, poetry". The Hindu. Archived from the original on 22 November 2022. Retrieved 12 February 2016.
  2. ↑ Austa, Sanjay (April 2005). "Calligraphying Poetry on Canvas". The South Asian. Archived from the original on 3 February 2017. Retrieved 12 February 2016.
  3. ↑ Israni, Natasha (5 March 2001). "Wisdom of Birds and Animals: Exhibition of calligraphic paintings by Ameena Ahmed Ahuja". India Today. Archived from the original on 22 November 2022. Retrieved 12 February 2016.
  4. ↑ "Ameena Ahmad Ahuja donates 33 paintings to Jamia Millia Islamia". One India. 16 May 2007. Archived from the original on 22 November 2022. Retrieved 12 February 2016.
  5. ↑ Ameena Ahmed Ahuja (2009). Calligraphy in Islam. Penguin India. p. 120. ISBN 9780670082605.
  6. ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 October 2015. Retrieved 3 January 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமீனா_அகமது_அஹுஜா&oldid=4534529" இலிருந்து மீள்விக்கப்பட்டது