அமீதா ஒசைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமீதா ஒசைன்
Hameeda Hossain
தாய்மொழியில் பெயர்হামিদা হোসেন
பிறப்பு1936 (அகவை 87–88)
ஐதராபாத் (பாகிஸ்தான்), பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் பாக்கித்தான்)
படித்த கல்வி நிறுவனங்கள்வெசுலி கல்லூரி
ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் (முனைவர்)
வாழ்க்கைத்
துணை
கமல் ஒசைன்

அமீதா ஒசைன் (Hameeda Hossain) என்பவர் வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்த மனித உரிமைகள் செயல்பாட்டாளர் மற்றும் கல்வியாளராவார். குறிப்பாக வங்கதேசத்தில் பெண்கள் உரிமைக்காக பேசப்படும் ஒரு முக்கிய பெண் உரிமை ஆர்வலராகக் கருதப்படுகிறார். உலகெங்கிலும் உள்ள மனித உரிமைகள் பிரச்சினைகள், வங்காளதேசத்திலுள்ள இசுலாமிய பெண்கள் பிரச்சினைகள் தொடர்பான பல புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதி இவர் வெளியிட்டுள்ளார்.[1] வங்காள தேசத்திலுள்ள சட்ட உதவி மற்றும் மனித உரிமைகள் அமைப்பான ஐன் ஓ சலீசு கேந்திராவை நிறுவியவர்களில் ஒருவராகவும் அதன் உறுப்பினராகவும் உள்ளார். 1968 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இவர் பத்திரிகை ஆசிரியராகச் செயல்பட்டார்.

1969 ஆம் ஆண்டு கிழக்கு பாக்கித்தான் பொருளாதார நிபுணர் இரெகுமான் சோபனுடன் இணைந்து நடப்பு விவகார பத்திரிகையான போரம் என்ற இதழை ஆங்கில மொழியில் வெளியிட்டார். மேற்கு பாக்கித்தான் நிறுவனத்திற்கு எதிராக வெளிப்படையான விமர்சனத்தைப் பேசியதற்காகவும் பாக்கித்தான் ஒன்றியத்தில் சனநாயகம் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை ஆதரித்த காரணத்திற்காகவும் புகழ் பெற்றது.

மத தீவிரவாதத்திற்கு எதிரான சர்வதேச பாதுகாப்பைக் குறிக்கும் சர்வதேச மனித உரிமை அமைப்பான மதச்சார்பற்ற இடத்திற்கான மையம் அமைப்பின் இயக்குநர்கள் குழுவில் ஒசைன் ஓர் உறுப்பினராக உள்ளார்.[2]

வங்கதேசத்தின் சுதந்திரத்திற்குப் பிறகு, அமீதா டாக்காவில் உள்ள பல்கலைக்கழக அச்சக நிறுவனத்தில் பத்திரிகை ஆசிரியராக சேர்ந்தார். போர்க்கால பாலியல் வன்முறையில் இருந்து தப்பிய பெண்களின் மறுவாழ்வில் தீவிரமாக ஈடுபட்டார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

நடுவில் அமீதா ஒசைன் (2015)

அமீதா 1936 ஆம் ஆண்டு ஐதராபாத்தில் பிறந்தார். தற்போது பாக்கித்தான் நாட்டிலுள்ள சிந்து மாகாணத்தில் இந்த இடம் உள்ளது.[3] இவரது குடும்பத்தில் இருந்த மூன்று பெண் குழந்தைகள் மற்றும் மூன்று ஆண் குழந்தைகளுக்கும் இளையவராக இவர் அக்குடும்பத்தில் பிறந்தார்.[4] தந்தை நீதிபதி என்பவதால் வெவ்வேறு ஊர்களுக்கு பணி நிமித்தமாக மாறுதல் பெற்று சென்று விடுவார்.[5] குழந்தைகள் எழுவரும் தாயாரின் அரவணைப்பில் கராச்சியில் வாழ்க்கை நடத்தினர்.

அமீதா ஒரு கன்னிமட பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பெற்றார். அமெரிக்காவின் மாசாசூசெட்சில் உள்ள தனியார் கல்லுரியான வெல்லெசுலி கல்லூரியில் வரலாறு மற்றும் இலக்கியத்தில் பட்டப் படிப்பையும், இங்கிலாந்திலுள்ள ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் வரலாறு பாடத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.[3]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

அமீதாவும் கமலும்

1992 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் இருந்த கானோ போரம் என்ற அரசியல் கட்சியின் தலைவரான கமல் ஒசைனை அமிதா திருமணம் செய்து கொண்டார்.[6] இவர்களுக்கு திரைப்படத் தயாரிப்பாளரான தினா ஒசைன், வழக்கறிஞர் மற்றும் எழுத்தாரான சாரா ஒசைன் ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.[7][8] சாரா ஒசைன் “ஆனர்” என்ற இதழின் இணை ஆசிரியராக குற்றங்கள், முன்னுதாரணங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு குரல் கொடுக்கும் விதமாக பதிவிட்டு எழுதி வருகிறார்.[9]

விருது[தொகு]

அமீதா ஒசைனுக்கு 2021 ஆம் ஆண்டு வங்கதேச மேம்பாட்டு முயற்சி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. BDI, அமெரிக்காவைச் சேர்ந்த சார்பற்ற ஆராய்ச்சி மற்றும் தனித்துவ அறிஞர்கள் மற்றும் நிபுணர்களின் வழக்கறிஞர்கள் குழு ஒரு செய்திக்குறிப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த விருது, வங்காளதேசத்தின் வளர்ச்சிக்கு வழிவகுத்த மற்றும் அதன் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திய சவால்கள் மற்றும் இலட்சியங்களைப் புரிந்துகொள்வதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய சிறந்த நபர்கள் அல்லது அமைப்புகளை கௌரவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hameeda Hossain". South Asia Citizens Web. பார்க்கப்பட்ட நாள் 19 December 2013.
  2. "Board of Directors". Centre for Secular Space. Archived from the original on 19 December 2013. பார்க்கப்பட்ட நாள் 19 December 2013.
  3. 3.0 3.1 "Hameeda Hossain". The 1947 Partition Archive.
  4. "Hameeda Hossain [Oral history interview by Kris Manjapra]". Bengali Cultural Heritage in the Postcolonial Age. Tufts University.
  5. Hameeda Hossain (16 May 2012). Dr. Hameeda Hossain lived in Hyderabad, Sindh, during 1947. The 1947 Partition Archive. Event occurs at at 0:47 minutes in – via YouTube. We stayed in Karachi with my mother, while he stayed wherever his work station was.
  6. "Two decades of Gono Forum". Probenews. 4 February 2012 இம் மூலத்தில் இருந்து 29 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131029193001/http://probenews.com/utility/emaillists/printview/4f2db660-626c-443d-9395-2672416fb142/ams/Newsarticle. 
  7. "Nurul Kabir to continue his defence on Dec 20". BDNews24. 1 December 2011. http://bdnews24.com/bangladesh/2011/12/01/nurul-kabir-to-continue-his-defence-on-dec-20. 
  8. "Yunus verdict today". The Daily Star. 5 May 2011. http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=184303. 
  9. Lynn Welchman & Sara Hossain, தொகுப்பாசிரியர் (2005). 'Honor': Crimes, Paradigms and Violence Against Women. London: Zed Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781842776278. https://books.google.com/books?id=ujwLunL_rrQC&q=%22David+Bergman%22+%22Sara+Hossain%22&pg=PR9. பார்த்த நாள்: 22 December 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமீதா_ஒசைன்&oldid=3867203" இலிருந்து மீள்விக்கப்பட்டது