அமில வாயு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அமில வாயு (Acid gas) என்பது இயற்கை வாயுவின் குறிப்பிடத்தக்க அளவு ஐதரசன் சல்பைடும் (H2S), கார்பனீராக்சைடும் (CO2) அல்லது இதே போன்ற அமில வாயுக்களைக் கொண்ட வேறு எந்த வாயு கலவையையும் குறிக்கும்.

அமில வாயு மற்றும் புளிப்பு வாயு என்ற சொற்கள் பெரும்பாலும் ஒத்த சொற்களாக தவறாக கருதப்படுகின்றன. புளிப்பு வாயு என்பது குறிப்பிடத்தக்க அளவு ஐதரசன் சல்பைடைக் கொண்டிருக்கும் எந்த வாயுவுமாகும் என்று உறுதியாகக் கூறலாம். அமில வாயு என்பது கார்பனீராக்சைடு அல்லது ஐதரசன் சல்பைடு போன்ற குறிப்பிடத்தக்க அளவு அமில வாயுக்களைக் கொண்டிருக்கும் எந்த வாயுவுமாகும். எனவே கார்பனீராக்சைடு என்பது ஓர் அமில வாயு மட்டுமே ஆனால் அது ஒரு புளிப்பு வாயு அல்ல. அமில வாயுவை காடி வளிமம் என்ற பெயராலும் அழைக்கலாம்.

செயலாக்கம் மற்றும் பாதுகாப்பு[தொகு]

ஐதரசன் சல்பைடு, கார்பனீராக்சைடு போன்ற அமில வாயுக்கள் கொண்ட ஒரு மூல இயற்கை வாயுவைப் பயன்படுத்துவதற்கு முன்பு இவ்வியற்கை வாயுவில் காணப்படும் அசுத்தங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிற்குக் குறைக்க வேண்டும். இதற்காக பொதுவாக ஓர் அமீன் வாயு சுத்திகரிப்பு செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது. [1][2] அகற்றப்பட்ட ஐதரசன் சல்பைடு பெரும்பாலும் கிளாசு செயன்முறை மூலம் தனிமநிலை கந்தமாக மாற்றப்படுகிறது அல்லது மாற்றாக ஈர கந்தக அமிலச் செயன்முறை வழியாக கந்தக அமிலமாக மாற்றப்படுகிறது.

மெர்காப்டான்கள், ஐதரசன் சல்பைடு போன்றவற்றை அகற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், இயற்கை-எரிவாயு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் இச்செயல்முறையை பொதுவாக இனிப்பு செயல்முறைகள் என்று குறிப்பிடப்படுகின்றன, ஏனெனில் அவை மெர்காப்டான்கள் மற்றும் ஐதரசன் சல்பைடுகளின் புளிப்பு, துர்நாற்றம் இல்லாத தயாரிப்புகளை விளைவிக்கின்றன.

ஐதரசன் சல்பைடு ஒரு நச்சு வாயுவாகும். பல உலோகங்கள் சல்பைடு அழுத்த விரிசலுக்கு உணர்திறன் கொண்டிருப்பதால், புளிப்பு வாயுவை குழாய் வழி செலுத்தவும் இவ்வாயுவை கையாளப் பயன்படும் பிற உபகரணங்களையும் இது கட்டுப்படுத்துகிறது. 7% முதல் 10.1% செறிவு உள்ள கார்பன் டை ஆக்சைடு வாயு தலைச்சுற்றல், தலைவலி, காட்சி மற்றும் செவித்திறன் செயலிழப்பு மற்றும் சில நிமிடங்கள் முதல் சில மணி நேரம் வரை மயக்கத்தை ஏற்படுத்துகிறது. 17 சதவீதத்திற்கு அதிகமான செறிவு கொண்ட கார்பனீராக்சைடு ஒரு நிமிடத்திற்கு மேல் வெளிப்படும் போது பெரும் ஆபத்துகள் ஏற்படலாம். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. NaturalGas.org website page பரணிடப்பட்டது 2011-01-01 at the வந்தவழி இயந்திரம் Processing Natural Gas
  2. Energy Information Agency website page பரணிடப்பட்டது 2011-03-04 at the வந்தவழி இயந்திரம் Natural Gas Processing: The Crucial Link Between Natural Gas Production and Its Transportation to Market
  3. U.S. Environmental Protection Agency: "Carbon Dioxide as a Fire Suppressant: Examining the Risks"
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமில_வாயு&oldid=3064007" இருந்து மீள்விக்கப்பட்டது