உள்ளடக்கத்துக்குச் செல்

அமிர்தா பிரகாஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமிர்தா பிரகாஷ்
பிறப்பு(1987-05-12)12 மே 1987
செய்ப்பூர், ராஜஸ்தான், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்மும்பை பல்கலைக்கழகம்
பணி

அமிரிதா பிரகாஷ் (Amrita Prakash) ஓர் இந்திய திரைப்பட நடிகையும், வடிவழகியும் ஆவார். இவர் நான்கு வயதாக இருந்தபோது தனது நடிப்புத் தொழிலைத் தொடங்கினார். மேலும் பாலிவுட், மலையாளத் திரைப்படங்களில் நடித்தார். அதன் பிறகு, இவர் எண்ணற்ற பாலிவுட் திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், தொலைக்காட்சி உண்மைநிலை நிகழ்ச்சி, புனைகதை நிகழ்ச்சிகளில் காணப்படுகிறார். இவர் கடைசியாக சோனி தொலைக்காட்சியின் பாட்டியாலா பேப்ஸ் என்ற புகழ்பெற்ற நிகழ்ச்சியில் ஈஷா என்ற வேடத்தில் நடித்தார்.

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

அமிர்தா மும்பை பல்கலைக்கழகத்தில் வணிகவியல், வணிக நிர்வாகம் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

விளம்பரத் தொழில்

[தொகு]

தனது நான்கு வயதிலேயே விளம்பரஙகளுடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது முதல் விளம்பரம் கேரளாவில் உள்ள ஒரு உள்ளூர் காலணி நிறுவனத்திற்காக இருந்தது. அதன்பிறகு, இவரது குழந்தை பருவத்தில் ரசனா, ரஃபிள்ஸ் லேஸ், குளுக்கோன்-டி, டாபர் போன்ற முக்கிய பொருட்களுக்காக 50க்கும் மேற்பட்ட விளம்பரங்களை செய்தார். இவர் இரண்டு வருடங்களுக்கு மேலாக லைப்பாய் சோப்பின் முகமாக இருந்தார். சமீபத்தில் இவர் சன்சில்க், கிட்ஸ் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றின் விளம்பரங்களில் காணப்படுகிறார்.

தொலைக்காட்சி

[தொகு]

தொலைக்காட்சியில் இவரது வேலை 9 வயதில் நடிகை கௌதமி காட்கிலின் மருமகளாக நடித்த ஒரு நாடக நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ஸ்டார் பிளஸின் இயங்குபட நிகழ்ச்சியான பாக்ஸ் கிட்ஸை தொகுத்து வழங்க ஒரு வாய்ப்பைப் பெற்றார். சுமார் 5 ஆண்டுகளாக, மிஸ் இந்தியா என்ற இவரது கதாபாத்திரம் குறிப்பாக குழந்தைகளிடையே மிகவும் பிரபலமானது.

2001 ஆம் ஆண்டில் அனுபவ் சின்ஹாவின் தும் பின் என்ற படத்தில் தனது முதல் பட வாய்ப்பைப் பெற்று புகழைடைந்தார். இதில் இவர் மில்லி என்ற முக்கியப் பாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர், தும் பின் கதையின் தொலைக்காட்சித் தொடரிலும் தொடர்ந்தார். இவருக்கு 14 வயதாக இருந்தபோது, கியா மஸ்தி கியா தூம் என்ற தலைப்பில் ஒளிபரப்பப்பட்ட இந்தியாவின் முதல் உண்மைநிலை நிகழ்ச்சிக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாலிவுட் நடிகை சோனாலி பேந்திரேவுடன் இணைந்து இரண்டு வருடங்கள் நடித்தார்.

ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹர் கர் குச் கெஹ்தா ஹாய் என்ற நாடகத்தில் முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். இது இவரது கடைசி தொலைக்காட்சி நாடகமாகும்.

திரைப்படங்கள்

[தொகு]

2004 ஆம் ஆண்டில், கமல் இயக்கிய மஞ்சுபோலோரு பெண்குட்டி என்ற மலையாளத் திரைப்படத்தில் தோன்றினார். கேரளாவில் 16 வயது பள்ளி மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்யும் மாற்றாந் தந்தையை மையமாக வைத்து இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் கன்னடம் , தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டது. அமிர்தா சிறந்த நடிகைக்கான தேசிய விருதுகளுக்கு மாநிலத்தால் பரிந்துரைக்கப்பட்டார்.

ராஜ்ஸ்ரீ பிலிம்ஸ் தயாரிப்பில் சூரஜ் பர்ஜத்யாவின் விவாஹ் என்ற படத்தில் சோட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். [1] இப்படத்தில் இவரது நடிப்பு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. அமிர்தா மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டுகிறார்- "விவாஹ் என் வாழ்க்கையின் மிகப்பெரிய மைல்கற்களில் மற்றும் திருப்புமுனைகளில் ஒன்றாகும். திரைப்படத்திலும் அதற்குப் பிறகும் அவர் எனக்கு ஆசிரியராகவும் வழிகாட்டியாகவும் இருந்ததற்கும் இந்தியாவின் ஒவ்வொரு நகரத்தின் வரைபடத்திலும் என்னை அழைத்துச் சென்றததற்கும் நான் அவருக்கு (சூரஜ் பர்ஜத்யா ) போதுமான நன்றியுள்ளவளாக இருக்க முடியாது."

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Amrita Prakash back with a bang". Oneindia.in. Archived from the original on 18 February 2012. பார்க்கப்பட்ட நாள் 2011-09-12.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிர்தா_பிரகாஷ்&oldid=3289676" இலிருந்து மீள்விக்கப்பட்டது