அமிர்சர் ஏரி
அமிர்சர் ஏரி Hamirsar | |
---|---|
![]() அமிர்சர் ஏரியின் வடக்கு கரை | |
அமைவிடம் | புஜ், குஜராத் |
ஆள்கூறுகள் | 23°15′5″N 69°39′51″E / 23.25139°N 69.66417°Eஆள்கூறுகள்: 23°15′5″N 69°39′51″E / 23.25139°N 69.66417°E |
ஏரி வகை | செயற்கை ஏரி |
வடிநில நாடுகள் | ![]() |
மேற்பரப்பளவு | 28 ஏக்கர்கள் (11 ha) |
Islands | ராஜேந்திரா பூங்கா |
குடியேற்றங்கள் | புஜ் |
அமிர்சர் ஏரி அல்லது ஹமிர்சர் ஏரி (Hamirsar Lake); இது, இந்தியாவின், குஜராத் மாநில கட்ச் மாவட்டத்திலுள்ள, புஜ் நகரத்தின் இதயப் பகுதியில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய ஏரியாகும்.[1] 450 ஆண்டுகள் பழைமையான இந்த அமிர்சர் ஏரி, ஜடேஜாவின் (Jadeja) ஆட்சியாளரும், மற்றும் புஜ் நகரை நிறுவியவருமான "ராவ் அமீர்" (Rao Hamir (1472-1524) என்பவரால் நிர்மாணிக்கப்பட்டதாகும். பல பத்தாண்டுகளாக (பல தசாப்தங்களாக) உப்பு மற்றும் வறண்ட பூமியாக காணப்பட்ட கட்ச் மாவட்டம், இந்த ஏரியை உருவாக்கிய பின்னர் அப்பகுதி பாலைவனச்சோலையாக மாற்றம் பெற்றது. மூன்று ஆறுகளின் முதன்மை வரத்தாக அமையப்பெற்ற ஹமிர்சர் ஏரி, புஜ் நகரின் தண்ணீர்த் தேவைகளை நிறைவுசெய்கிறது.[2]
சான்றாதாரங்கள்[தொகு]
- ↑ Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).[தொடர்பிழந்த இணைப்பு]