உள்ளடக்கத்துக்குச் செல்

அமிரா ஹெஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமிரா ஹெஸ்

அமிரா ஹெஸ் ( Amira Hess ) ( பிறப்பு; 1943 பகுதாது, ஈராக்) இஸ்ரேலைச் சேர்ந்த கவிஞரும் கலைஞருமாவார். 1951 இல் இஸ்ரேலுக்கு வந்த இவர், முதலில் குடியேறியவர்களுக்கான முகாமில் வாழ்ந்தார், பின்னர் எருசலேமுக்கு சென்றார். அங்கு இவர் இன்றும் வாழ்கிறார். இவரது முதல் புத்தகமான, அண்ட் தி மூன் இஸ் டிரிப்பிங் மேட்னஸ், என்பதற்கு லூரியா பரிசு (கவிஞர் எருச்சம் லூரியா]]வின் பெயரிடப்பட்டது) வழங்கப்பட்டது. எபிரேயத்தில் வெளியிடப்பட்ட இவரது மற்ற கவிதைத் தொகுதிகளில் டூ ஹார்ஸ் பை தி லைட் லைன், தி இன்ஃபர்மேஷன் ஈட்டர், யோவெல், தேர் ஈச் நோ வுமன் இன் இஸ்ரேல் போன்றவையும் அடங்கும். சில தனிப்பட்ட கவிதைகள் ஆங்கிலம், பிரெஞ்சு, [1] இடாய்ச்சு, கிரேக்கம், எசுப்பானியம் மற்றும் உருசிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பிட்வீன் போல்டர்ஸ் ஆஃப் பாசால்ட் அண்ட் ஃபவுண்டேஷன் என்ற தலைப்பில் சுமார் எழுபது கவிதைகள் அடங்கிய தொகுப்பு, ஷே கே. அசோலே என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. [2] இவர் இன்றுவரை 13 கவிதை புத்தகங்களை வெளியிட்டுள்ளார். கவிதைக்கான பிரதம மந்திரிகள் பரிசு, எஹுதா அமிச்சாய் விருது மற்றும் கவிதைக்கான குகெல் & ஏஹெச்ஐ விருது என இரண்டு முறை இவருக்கு வழங்கப்பட்டது.

சான்றுகள்[தொகு]

  1. Fille de Salima (“בת סלימה”), Amira Hess, translation by Isabelle Dotan, Châteauroux-les-Alpes : Gros Textes, July 2009, 47 pages.
  2. "Amira Hess," Institute for the Translation of Hebrew Literature பரணிடப்பட்டது சூலை 13, 2009 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிரா_ஹெஸ்&oldid=3659019" இலிருந்து மீள்விக்கப்பட்டது