உள்ளடக்கத்துக்குச் செல்

அமியா குமார் பாக்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமியா குமார் பாக்சி
பிறப்பு1936
இறப்பு2024, நவம்பர், 28
கல்விப் பணி
துறைபொருளாதாரம்
Sub-disciplineபொருளாதார வரலாற்றாசிரியர்
கல்வி நிலையங்கள்கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், சமூக அறிவியல் படிப்பு மையம், கல்கத்தா, வளர்ச்சி ஆய்வுகள் நிறுவனம், கொல்கத்தா

அமியா குமார் பாக்சி (Amiya Kumar Bagchi) (1936 - 28 நவம்பர் 2024) இந்தியாவைச் சேர்ந்த பொருளாதார வரலாற்றாசிரியர் ஆவார்.[1]

வாழ்க்கை மற்றும் தொழில்

[தொகு]

அமியா குமார் பாக்சி இந்தியாவில் உள்ள கொல்கத்தாவின் பிரசிடென்சி கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பயின்றார். 1963 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.[2] இவரது கற்பித்தல் வாழ்க்கை பிரசிடென்சி கல்லூரியில் தொடங்கியது. இதைத் தொடர்ந்து 1960 களில் கேம்பிரிட்ச்சு பல்கலைக்கழகத்தில் பொருளாதார பீடத்தில் பணியாற்றி வந்தார். இங்கு இவர் இயேசு கல்லூரியின் பெலோவாக இருந்து வந்தார்.[3]

1974 ஆம் ஆண்டு கொல்கத்தாவின் புதிதாக நிறுவப்பட்ட சமூக அறிவியல் ஆய்வு மையத்தில் சேர்ந்தார்.[2][3]

இந்திய வங்கி மற்றும் நிதி வரலாற்றில் அமியா குமார் பாக்சி நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்ந்தார். மேலும் 1997 ஆம் ஆண்டு வரை இந்திய பாரத மாநில வங்கியின் வரலாற்றாசிரியராகப் பணியாற்றி வந்தார்.[4]

2001 ஆம் ஆண்டு கொல்கத்தாவின் சமூக அறிவியல் ஆய்வு மையத்தில் இந்திய ரிசர்வ் வங்கித் தலைவர் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். பிறகு, கொல்கத்தாவின் மேம்பாட்டு ஆய்வுகள் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநரானார்.[4]

அமியா குமார் பாக்சி 2024 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், 28 ஆம் தேதியன்று இறந்தார்.[2][3]

விருதுகள்

[தொகு]

2005 ஆம் ஆண்டில், அமியா குமார் பாக்சிக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kurien, C. T. (3 October 2006). "An 'alternative history'". [The Hindu] இம் மூலத்தில் இருந்து 10 October 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061010112034/http://www.hindu.com/br/2006/10/03/stories/2006100301151400.htm. 
  2. 2.0 2.1 2.2 "Amiya Bagchi, the man who made economics a tool for devpt, dies". [The Times of India]. 29 November 2024 இம் மூலத்தில் இருந்து 29 November 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241129045000/https://timesofindia.indiatimes.com/city/kolkata/legacy-of-amiya-bagchi-pioneer-in-development-economics-endures-after-his-passing/articleshow/115781599.cms. 
  3. 3.0 3.1 3.2 Patnaik, Prabhat (29 November 2024). "Economic historian Amiya Kumar Bagchi passes away". The Hindu இம் மூலத்தில் இருந்து 29 November 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241129021746/https://www.thehindu.com/news/national/economic-historian-amiya-kumar-bagchi-passes-away/article68924567.ece. 
  4. 4.0 4.1 Chakraborty, Achin (16 December 2024). "Amiya Kumar Bagchi: A People-Centric Intellectual Journey". The India Forum. Archived from the original on 15 February 2025.
  5. "Padma Awards Directory (1954–2017)" (PDF). Ministry of Home Affairs. p. 80. Archived (PDF) from the original on 25 March 2024. Retrieved 6 March 2025.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமியா_குமார்_பாக்சி&oldid=4243065" இலிருந்து மீள்விக்கப்பட்டது