அமித் மித்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அமித் மித்ரா

அமித் மித்ரா என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பொருளியலாளர் ஆவார். இவர் திரிணாமுல் காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். மேற்கு வங்க மாநில அமைச்சரவையில் நிதி,வணிகம்,மற்றும் தொழில் அமைச்சராக இருக்கிறார். இவர் இந்திய வணிக மற்றும் தொழில் சங்கத்தின் பொதுச் செயலராக இருந்தார்.[1][2][3]

அமித் மித்ரா அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரசில் மம்தா பானர்சியின் அழைப்பிற்கு இணங்க சேர்ந்தார். 2011இல் நடந்த மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அமைச்சர் ஆனார்.

பிறப்பும் படிப்பும்[தொகு]

அமித் மித்ராவின் தந்தை அரிதாசு மித்ரா இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார் இவருடைய தாய் வழி பாட்டனார் நேதாசி சுபாசு சந்திர போசுவின் அண்ணன் ஆவார். அமித் மித்ரா கொல்கத்தா பள்ளியிலும் பின்னர் பிரசிடென்சிக் கல்லூரியில் பொருளியல் கல்வி கற்றார். கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடக்கும் விவாதப் போட்டிகளில் கலந்து கொண்டார். தில்லி பொருளியல் பள்ளியில் மூத்தவர் பட்டம் பெற்றார் 1978 இல் டியூக் பல்கலைக்கழகத்தில் பயின்று ஆய்வுப் பட்டம் பெற்று சிறந்த மாணவர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.

விருதுகள்[தொகு]

2008 ஆம் ஆண்டில் இந்திய நடுவணரசு அமித் மித்ராவுக்கு பத்ம சிறீ விருது வழங்கிப் பெருமைப் படுத்தியது.[4] 2005 ஆம் ஆண்டில் சப்பானிய அரசு இவருக்கு  எழும் ஞாயிறு என்ற பட்டம் வழங்கியது.[5] 2007 இல் இத்தாலிய அரசு இவருக்கு  விருது வழங்கியது.

மேற்கோள்[தொகு]

  1. "Khardaha". Assembly Elections May 2011 Results. Election Commission of India. பார்த்த நாள் 2011-05-13.
  2. "134 – Khardah Assembly Constituency". Partywise Comparison Since 1977. Election Commission of India. பார்த்த நாள் 2011-05-11.
  3. "Statistical Reports of Assembly Elections". General Election Results and Statistics. Election Commission of India. மூல முகவரியிலிருந்து 5 October 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-10-15.
  4. "Mamata picks Ficci boss Amit Mitra to take on Finance Minister Asim". Express News Service, 15 March 2011  . பார்த்த நாள் 2011-05-11.
  5. "Japanese honour for Amit Mitra". The Hindu Business Line 30 April 2005. பார்த்த நாள் 2011-05-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமித்_மித்ரா&oldid=2710997" இருந்து மீள்விக்கப்பட்டது