உள்ளடக்கத்துக்குச் செல்

அமிதா தாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமிதா தாசு
Amita Das
பிறப்பு(1965-08-03)3 ஆகத்து 1965
அமிருதசரசு, பஞ்சாப், இந்தியா
தேசியம்இந்தியா
துறைஅயனிமம் (இயற்பியல்), சீரொளி இயற்பியல்
பணியிடங்கள்பிளாசுமா ஆராய்ச்சி நிறுவனம், இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி
கல்வி கற்ற இடங்கள்Indian Institute of Technology
அறியப்படுவதுஅயனிமம் (இயற்பியல்) கோட்பாடு

அமிதா தாசு (Amita Das) ஓர் இந்திய பிளாசுமா இயற்பியலாளராவார். இவர் 1965 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 ஆம் நாள் பிறந்தார். 1998 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டுவரை இந்தியாவின் குசராத்து மாநிலத்திலுள்ள பிளாசுமா ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.[1] 2014-2017 ஆம் ஆண்டுகள் காலத்தில் இதே நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றினார். தற்போது தில்லியிலுள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இந்திய அறிவியல் அகாடமியின் சக உறுப்பினர்,[2] இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் சக உறுப்பினர், இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் சக உறுப்பினர்[3] Fellow of National Academy of Sciences, India[4] என்ற பல சிறப்புகளை அமிதா தாசு பெற்றுள்ளார். உருசியா மற்றும் உக்ரைனில் இயங்கும் தென் கிழக்கு புரட்சித் தொகுப்பு என்ற அமைப்பின் உள்ளக உறுப்பினராகவும் அமிதா உள்ளார். பாட்னாவின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்ற இந்திய இயற்பியல் சங்கத்தில் இந்திய அணுசக்தி ஆணைய சி வி. ராமன் சொற்பொழிவு நிகழ்த்தினார்.[5] இந்தியாவின் தேசிய அறிவியல் அகாடமியின் கூட்டுறவு ஆய்வுக் குழுவின் உறுப்பினராக உள்ளார்.[6] குசராத் அறிவியல் அகாடமியின் ஆராய்ச்சிக்குழு உறுப்பினராகவும்[7] உள்ள இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் வருகைதரும் பேராசிரியராகவும்[8] பணியாற்றுகிறார். மகளிர் சாதனையாளர் விருது[9] பெற்ற இவர் குறித்த பல வெளியீடுகள் உள்ளன.[10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "academic-staff-groups-institute-for-plasma-research". yumpu.com.
  2. "Fellowship | Indian Academy of Sciences". www.ias.ac.in.
  3. "INSA :: Indian Fellow Detail". www.insaindia.res.in. Archived from the original on 2020-02-27. பார்க்கப்பட்ட நாள் 2020-11-07.
  4. "The National Academy of Sciences, India - Fellows". www.nasi.org.in. Archived from the original on 2015-07-17. பார்க்கப்பட்ட நாள் 2020-11-07.
  5. "Indian Physics Association".
  6. "The National Academy of Sciences, India - Committee". www.nasi.org.in. Archived from the original on 2020-01-29. பார்க்கப்பட்ட நாள் 2020-11-07.
  7. "Gujarat Science Academy". gujaratscienceacademy.org. Archived from the original on 2018-04-27. பார்க்கப்பட்ட நாள் 2020-11-07.
  8. "Department of Applied Mathematics". www.caluniv.ac.in. Archived from the original on 2021-04-07. பார்க்கப்பட்ட நாள் 2020-11-07.
  9. "Women achievers awarded at a function in Ahmedabad | Ahmedabad News - Times of India". The Times of India.
  10. "amita das - Google Scholar Citations". scholar.google.co.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிதா_தாசு&oldid=4049613" இலிருந்து மீள்விக்கப்பட்டது