உள்ளடக்கத்துக்குச் செல்

அமிதா கனேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமிதா கனேகர்(Amita Kanekar) ஒரு எழுத்தாளரும் கட்டிடக்கலை வரலாற்றாய்வாளரும் ஆவார். இவரது முதல் புதினமான"எ இசுபோக் இன் த வீல்" நல்ல வரவேற்பைப் பெற்றது. இது முதலில் ஹார்பர்காலின்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு, பின்னர் நவயானா[1] பதிப்பகத்தால் மீண்டும் வெளியிடப்பட்டது.

கனேகரின் இரண்டாவது நூல், தெக்கான் பிராந்தியத்தின் போர்த்துகீசிய கடற்கோட்டைகளின் கட்டிடக்கலை பற்றிய வழிகாட்டி நூலாகும். இவரது மூன்றாவது நூல் பியர் ஆஃப் லயன்சு என்ற மற்றொரு புதினமாகும்; இது 2019[2] ஆம் ஆண்டு ஹஷெட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

இவர் கட்டிடக்கலை, வரலாறு மற்றும் அரசியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்தித்தாள் பத்திகளையும் எழுதி வருகிறார். மேலும், கோவா கட்டிடக்கலைக் கல்லூரியில் கட்டிடக்கலை வரலாறு மற்றும் கோட்பாடுகளைக் கற்பித்து வருகிறார்.

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

அமிதா கனேகர் 1965ஆம் ஆண்டு கோவாவின் மார்காவோவில் பிறந்தார். இரண்டு வயது வரை அருகிலுள்ள நாவேலிம் கிராமத்தில் வாழ்ந்த இவர், பின்னர் அமெரிக்காவிற்கும் அதன்பின் மும்பைக்கும் குடிபெயர்ந்தார். மும்பையில், ஜூஹுவில் அமைந்துள்ள கமலா ரஹேஜா வித்யாநிதி கட்டிடக்கலைக் கல்வி நிறுவனத்தில் கட்டிடக்கலை வரலாற்றையும், மும்பை பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு புராணவியலையும் கற்பித்தார்.

இவரது தந்தை சுரேஷ் கனேகர், காலனித்துவ ஆட்சிக்கு எதிரான இயக்கத்தில் பங்கேற்றதற்காக அன்றைய போர்த்துகீசிய அரசால் இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டார். இவரது தாய்வழி அத்தை மித்ரா பீர் ஒரு கல்வியாளர் ஆவார். இவர் 22 வயதில் பன்னிரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். பின்னர் மார்காவோ, வெரெம், ககோரா மற்றும் கோவாவின் பிற பகுதிகளில் பெண்களுக்கான பள்ளிகளையும், பெண்களுக்கான முதியோர் மற்றும் தொழிற்கல்வி மையங்களையும் நிறுவினார். இவர் 1978 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

மித்ரா பீர், கோவா சட்டமன்றத்தின் உறுப்பினரும் காந்தியவாதியுமான மறைந்த மாதவ் ஆர். பீரை திருமணம் செய்திருந்தார். கனேகரின் தாய்வழி மாமாவான மறைந்த எம். வி. ககோட்கரும், 1960களில் கோவாவில் அனைத்து மக்களுக்கும் கோயில்களைத் திறக்க வேண்டிய இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றார்.

தொழில் வாழ்க்கை

[தொகு]

அமிதா கனேகரின் முதல் புதினமான எ இசுபோக் இன் த வீல், புத்தரை மையமாகக் கொண்ட வரலாற்றுப் புனைகதை ஆகும். இந்நூல் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. 2005 ஆம் ஆண்டு ஹார்பர்காலின்ஸ் இந்தியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்நூல், அதே ஆண்டில் இரண்டாவது பதிப்பையும் கண்டது. பின்னர் 2014 ஆம் ஆண்டு நவயானா (தில்லி) பதிப்பகத்தால் இரண்டாவது பதிப்பு வெளியிடப்பட்டது.

இவரது இரண்டாவது நூல் போர்த்துகீசியக் கடற்கோட்டைகள் சௌல், கோர்லாய் மற்றும் வசாயுடன் என்ற கட்டிடக்கலை வழிகாட்டி நூலாகும். இது 2015 ஆம் ஆண்டு ஜெய்கோ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

இவரது மூன்றாவது நூலான ஃபியர் ஆஃப் லயன்சு முகலாய இந்தியாவை பின்னணியாகக் கொண்ட மற்றொரு வரலாற்றுப் புனைகதை நாவலாகும். இது 2019 ஆம் ஆண்டு ஹஷெட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

மேலும், இவர் கட்டிடக்கலை வரலாறு தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். கட்டிடக்கலை, வரலாறு மற்றும் அரசியல் தொடர்பான செய்தித்தாள் பத்திகளையும் எழுதி வருகிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gap In History". Outlook. 2 May 2005. Archived from the original on 4 December 2011. Retrieved 29 August 2011.
  2. Kanekar, Amita (11 July 2019). "Women lead a rebellion of peasants against the Mughal Empire in this historical novel". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-03-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிதா_கனேகர்&oldid=4598230" இலிருந்து மீள்விக்கப்பட்டது