அமிட் ரோகிதாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமிட் ரோகிதாசு
Amit Rohidas
Amit Rohidas.jpg
தனித் தகவல்
பிறப்பு10 மே 1993 (1993-05-10) (அகவை 29)
சுந்தர்கர், ஒடிசா
உயரம்1.79 மீ[1]
விளையாடுமிடம்தடுப்பாட்டக்காரர்
தேசிய அணி
2013இந்தியா 21 வயதுக்கு கீழ்
2013–இந்திய தேசிய வளைதடிப் பந்தாட்ட அணி73(8)
பதக்க சாதனை
Men's வளைதடிப் பந்தாட்டம்
ஆசிய விளையாட்டுகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2018 சாகர்த்தா அணி
ஆசியக் கோப்பை
தங்கப் பதக்கம் – முதலிடம் 2017 டாக்கா {{{2}}}
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2013 ஈப்போ {{{2}}}
வெற்றியாளர் கோப்பை
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2018 பிரெதா {{{2}}}
உலகக் கோப்பை
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2016–17 புவனேசுவர் அணி
Last updated on: 3 மார்ச்சு 2019

அமிட் ரோகிதாசு (Amit Rohidas) இந்திய வளைகோல் பந்தாட்ட வீரராவார். 1993 ஆம் ஆண்டு மே மாதம் 10 அன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய அணியின் தடுப்பாட்டக்காரராக இவர் விளையாடுகிறார். 2021 ஆம் ஆண்டு சூலை மாதம் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணியில் இவர் விளையாடுகிறார்.

வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

சுந்தர்கர் மாவட்டத்தின் சவுனமரா கிராமத்தில் 1993 ஆம் ஆண்டு மே 10 அன்று ரோகிதாசு பிறந்தார். தனது கிராமத்தில் வளைகோல் பந்தாட்டம் விளையாடத் தொடங்கினார். 2004 ஆம் ஆண்டில் ரூர்கேலாவில் உள்ள பான்போசு விளையாட்டு விடுதியில் சேர்ந்தார்.2009 இல் தேசிய இளையோர் அணியில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2]

மலேசிய நாட்டின் ஈப்போவில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பைக்கான மூத்தோர் அணியில் ரோகிதாசு தேர்வு செய்யப்பட்டார். இப்போட்டியில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. 2017 ஆம் ஆண்டில் இந்திய அணிக்கு மீண்டும் வந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "ROHIDAS Amit". www.worldcup2018.hockey. International Hockey Federation. 6 மார்ச் 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 March 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. "HIL is the best thing to happen in my life: Amit Rohidas". The Times of India. 5 January 2013. https://timesofindia.indiatimes.com/sports/hockey/top-stories/HIL-is-the-best-thing-to-happen-in-my-life-Amit-Rohidas/articleshow/17901530.cms. பார்த்த நாள்: 12 November 2017. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிட்_ரோகிதாசு&oldid=3630224" இருந்து மீள்விக்கப்பட்டது