உள்ளடக்கத்துக்குச் செல்

அமார்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செபிட்-ருட் மற்றும் தோ கெசர் ஆற்றுக்கு இடையே உள்ள அமார்தி பகுதியைக் காட்டும் வரைபடம்.

அமார்தி (Amardi)(மற்றும் சில சமயங்களில் மார்டி ) என்று பரவலாகக் குறிப்பிடப்படும் அமார்தியன்கள், வடக்கே காசுப்பியன் கடலின் எல்லையில் மலைப் பகுதியில் வாழும் ஒரு பண்டைய ஈரானிய[1] இரும்புக் காலத்தைச் சேர்ந்த மார்லிக் என்ற இடத்தில் அமைந்துள்ள அரச கல்லறையின் தளம் அமார்ட் மக்களின் பெயரால் அறியப்படுகிறது.[2] இவர்கள் தாகர் மற்றும் சகர் போன்ற பழங்குடியினருடன் தொடர்புடையவர்கள் அல்லது அதே பழங்குடியினர் என்றும் கூறப்படுகிறது. அதாவது சிதியர்களாக இருக்கலாம்.[3] தென்மேற்கு ஈரானில் உள்ள ஒரு வரலாற்றுப் பகுதியான பெர்சிஸில் உள்ள பத்து முதல் பதினைந்து பாரசீக பழங்குடியினரில் ஒருவராக இதே பெயரைக் கொண்ட ஒரு பழங்குடியினரை எரோடோட்டசு குறிப்பிடுகிறார்.[4] [5]

இவர்கள் நவீன தென்மேற்கு ஈரானில் உள்ள சூசிஸ் மற்றும் பெர்சிஸ் இடையே உள்ள பள்ளத்தாக்குகளில் வாழ்ந்தனர்.[6] தெற்கு மார்டி மக்கள் தென்மேற்கில் சூசியர்கள், உக்சி மற்றும் எலிமேனியர்களுடன் சேர்ந்து கொள்ளையடிக்கும் நான்கு மலைவாழ் மக்களில் ஒருவர் என்று பேரரசர் அலெக்சாந்தரின் இராணுவத்தில் இருந்த கிரேக்க அதிகாரிகளில் ஒருவரான நவார்ச் விவரிக்கிறார். இந்த நான்கு நாடோடி குழுக்களில், இவர்கள் மட்டுமே மொழியியல் ரீதியாக ஈரானியப் பழங்குடியினர்.[7]

வரலாற்றுக் குறிப்புகள்

[தொகு]

கிரேக்க வரலாற்று ஆய்வாளர் இசுட்ராபோ மார்டி என்ற பெயரை பல முறை குறிப்பிடுகிறார். காஸ்பியன் கடலின் தெற்கே வடக்கு ஈரானில் இப்போது கீலான் மற்றும் மாசாந்தரான் மாகாணங்களில் இவர்களின் இருப்பிடத்தை தனது வரைபடத்தில் அவர் குறிப்பிடுகிறார்.[2]

புகைப்படங்கள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]
  • "The Mardians: A Note" (PDF). Leonardo Gregoratti (Durham University, UK). Anabasis, Studies for Classical Eastern Orientalism.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Compact Bible atlas with gazetteer. Baker Book House. 1979. p. 7. ISBN 9780801024320 – via Google Books.
    - Smith, William (1854). Dictionary of Greek and Roman Geography. Vol. 1. Little, Brown & Company – via Google Books.
    - Indo-iranica. Vol. 2. Iran Society. 1947. p. 21 – via Google Books.
  2. 2.0 2.1 Negahban, Ezat O. (1995). Marlik: The Complete Excavation Report. UPenn Museum of Archaeology. p. 321. ISBN 9780924171321.
  3. Norris, Edwin (1853). Memoir on the Scythic Version of the Behistun Inscription (in ஆங்கிலம்). Harrison and Sons.
  4. "IRAN". Encyclopædia Iranica XIII. 
  5. Encyclopaedia Iranica. Vol. 13. Routledge & Kegan Paul. 2004. p. 336. ISBN 9780933273955. Retrieved May 21, 2020.
  6. Eadie, John (1852). Early Oriental History, Comprising the Histories of Egypt, Assyria, Persia, Lydia, Phrygia, and Phoenicia (in ஆங்கிலம்). Griffin. ISBN 9780848207410.
  7. electricpulp.com. "IRAN v. PEOPLES OF IRAN (2) Pre-Islamic – Encyclopaedia Iranica". www.iranicaonline.org (in ஆங்கிலம்). Retrieved 2017-08-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமார்தி&oldid=4162788" இலிருந்து மீள்விக்கப்பட்டது