அமாசு ராப்பப்போர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அமாசு ராப்பபோர்ட் (Amos Rapoport), ஒரு கட்டிடக்கலைஞரும், கட்டிடக்கலைப் பேராசிரியரும் ஆவார். வீடுகளின் வடிவத்துக்கும், பண்பாட்டுக்கும் இடையிலான தொடர்பாக அவர் செய்த ஆய்வுகளும், அதன் விளைவாக இவர் 1969 ஆம் ஆண்டில் எழுதிய வீட்டு வடிவமும் பண்பாடும் (House Form and Culture) என்னும் தலைப்பிட்ட நூலும் பெரிதும் அறியப்பட்டவை. இத்துறையில் ஒரு முன்னோடி ஆய்வான இவரது ஆய்வு கட்டிடக் கலை ஆய்வாளர்களில் கவனத்தை மிகக் குறைவாகவே பெற்றுவந்த குடிசை வீடுகள் முதலியவற்றை உள்ளடக்கிய நாட்டார் கட்டிடக்கலை தொடர்பில் புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியது. இது, உயர் பண்பாட்டுகளுக்குரிய கட்டிடங்களை மட்டுமே கட்டிடக்கலையாகப் பார்த்த நிலையை மாற்றி பல்வேறு இன மக்களின் மரபுவழிக் கட்டிடக் கலையின் பால் பலரையும் ஈர்த்தது என்று கூறலாம்.

இளமைக்காலம்[தொகு]

அமாசு ராப்பப்போர்ட் போலந்து நாட்டில் உள்ள வார்சோ நகரில் 1929 ஆம் ஆண்டு பிறந்தார். மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை பயின்ற ராப்பப்போர்ட், 1954 ஆம் ஆண்டில் கட்டிடக்கலையில் இளநிலைப் பட்டம் (B. Arch) பெற்றார். பின்னர் ரைசு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, 1956 ஆம் ஆண்டில் கட்டிடக்கலையில் முதுநிலைப் பட்டமும் (M. Arch) பெற்றார். 1962ஆம் ஆண்டில் மெல்பேர்ன் பல்கலைக்கழகத்திலிருந்து நகரம் மற்றும் பிரதேசத் திட்டமிடலில் பட்டப்பின் பட்டயக் கல்வியும் பெற்றார்.

தொழில்[தொகு]

1952 ஆம் ஆண்டிலிருந்து 1961 ஆம் ஆண்டுவரை பல அலுவலகங்களிலும் கட்டிடக்கலைத்துறையில் பணிபுரிந்தார். இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி, பேர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஆசுத்திரேலியாவில் உள்ள சிட்னிப் பல்கலைகழகம், மெல்பேர்ன் பல்கலைக்கழகம், விசுக்கோன்சின் - மில்வோக்கி பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக் கழகங்களில் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ள இவர், இசுரேல், துருக்கி, பெரிய பிரித்தானியா, ஆர்சென்டீனா, பிரேசில், கனடா, மெக்சிக்கோ, பியுட்டோ ரிக்கோ, இந்தியா, சுவிட்சர்லாந்து, போன்ற பல நாடுகளின் பல்கலைக்கழகங்களில் வருகைப் பேராசிரியராகவும் இருந்துள்ளார்.

அமாசு ராப்பப்பொர்ட் எழுதிய நூல்கள்[தொகு]

  1. House Form and Culture (வீட்டு வடிவமும் பண்பாடும்) - 1969
  2. Human Aspects of Urban Form (நகரிய வடிவத்தின் மானிட அம்சங்கள்) - 1977
  3. Meaning of Built Environment (கட்டிடச் சூழலின் பொருள்) - 1982
  4. History and Precedent in Environmental Design (சூழல் வடிவமைப்பில் வரலாறும், முன்மதிரியும்) - 1990
  5. Cukture, Architecture and Desugn (பண்பாடும் கட்டிடக்கலையும் வடிவமைப்பும்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமாசு_ராப்பப்போர்ட்&oldid=2707719" இருந்து மீள்விக்கப்பட்டது