அமலா நகர்
அமலா நகர் Amala Nagar | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 10°33′43″N 76°10′08″E / 10.56200°N 76.16892°E | |
| நாடு | |
| மாநிலம் | கேரளம் |
| மாவட்டம் | திருச்சூர் |
| அரசு | |
| • நிர்வாகம் | அதாட் கிராம பஞ்சாயத்து, கைப்பரம்பு கிராமப் பஞ்சாயத்து |
| மொழிகள் | |
| • அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| வாகனப் பதிவு | கே.எல்-8 |
அமலா நகர் (Amala Nagar) என்பது இந்தியாவின் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும்.[1]திருச்சூர் மாவட்டத்தின் மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றான அமலா மருத்துவ அறிவியல் நிறுவனம் இங்கு அமைந்துள்ளதால் இப்பெயரே இந்த இடத்திற்கு சூட்டப்பட்டது.[2]குட்டிப்புரம் வரை நீண்டு செல்லும் மாநில நெடுஞ்சாலை எண் 69 இல் அமலா நகர் உள்ளது. அருகில் விலங்கான் குன்னு மலை இருக்கும் காரணத்தால் முன்னர் விலங்கான் என்று அழைக்கப்பட்டது. பல்வேறு கோயில்கள், தேவாலயம் மற்றும் ஒரு மசூதி மற்றும் பல்வேறு மத்திய மற்றும் மாநில பாடத்திட்ட பள்ளிகள் இங்குள்ளன. சிறீராமகிருட்டிணா ஆசிரமம் மற்றும் சாரதா வித்யாபீடம் ஆகியவையும் உள்ளன. சிறீராமகிருட்டிணா ஆசிரமம் ஆண்களுக்கான பள்ளியையும், சாரதா வித்யாபீடம் பெண்களுக்கான பள்ளியையும் நடத்துகிறது. சோபா சிட்டி பேரங்காடி அமலா நகரிலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pin Code of Amalanagar in Thrissur, Kerala". www.mapsofindia.com. Retrieved 2019-03-26.
- ↑ "History of Amala Institute of Medical Sciences, Amala Nagar, Thrissur, Kerala, India". www.amalaims.org. Retrieved 2019-03-26.
.