உள்ளடக்கத்துக்குச் செல்

அமர் கோசுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமர் கோசுவாமி
பிறப்புஅமர் கோசுவாமி
(1945-11-28)28 நவம்பர் 1945
முல்தான், பஞ்சாப் மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு26 சூன் 2012(2012-06-26) (அகவை 66)
காசியாபாத், உத்தரப் பிரதேசம், இந்தியா
புனைபெயர்அமர் கோசுவாமி
தொழில்எழுத்தாளர், பத்திரிக்கையாளர்
தேசியம் இந்தியா
காலம்1945–2012
வகைபுதினம், சிறுகதை, கட்டுரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஹவா கி விருத்,ஈஸ் தௌர் மேன் ஹம்சபர்,சபாஷ் முன்னு , சுதாமா கி முக்தி (தேசிய புத்தக அறக்கட்டளை மூலம் வயது வந்தோர் கல்வி பிரச்சாரத்திற்காக எழுதப்பட்ட புத்தகம்)[1]
குறிப்பிடத்தக்க விருதுகள்இந்தி கேந்திரிய நிர்தேசாலாய் – 1987–88, பால் & கிஷோர் சாகித்ய சம்மான், இந்தி அகாடமி, புது தில்லி 2003–04, முனைவர் ராம் லால் வர்மா சம்மான் – 2006 (சாகித்ய கலா பரிசத்), இந்தோ-உருசிய இலக்கிய சபை (உருசிய அறிவியல் & கலாச்சார மையம்) – 1999

அமர் கோசுவாமி (Amar Goswami)(28 நவம்பர் 1945-26 சூன் 2012) பத்திரிக்கையாளராகவும் முக்கியத்துவம் வாய்ந்த அறிவியல் சார்ந்த படைப்புகளை எழுதிய எழுத்தாளராகவும் இந்தி இலக்கிய உலகில் அறியப்படுபவர். இவர் நையாண்டிக் கதைகள், சிறுகதைகள், கவிதைகள், புதினங்கள் மேலும் பெங்காலியிலிருந்து இந்தியில் மொழிபெயர்ப்பு செய்தல் போன்ற இலக்கியப் பங்களிப்புகளை வழங்கியுள்ளார். இவரின் படைப்புகள் இந்திய வானொலியில் ஒலிபரப்பப்பட்டுள்ளன. இவரது கதைகள் குறும்படங்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன.

இவர் கதாந்தர், விகல்ப், ஆகமிகள், சம்பா, மனோரமா, கங்கா, சண்டே அப்சர்வர் (இந்தி), பாரதி அம்சங்கள், உக்ஷூர் பாரத், பாரதிய ஞானபீடம், ரேமாதவ் பெளியீடு ஆகியவற்றுடன் தொடர்புடையவர்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

இந்தியா பிரிக்கப்படுவதற்கு முன்பிருந்த முல்தானில் பிராமணக்குடும்பத்தில் பிறந்தார். இவரின் இரண்டாம் அகவையில் தற்போது பாக்கித்தானில் இருக்கும் முல்தானிலிருந்து இடம் பெயர்ந்து உத்தரபிரதேசத்தில் உள்ள மிசார்புருக்கு குடிபுகுந்தனர். இவர் இந்தியில் முதுகலைப்பட்டம் பெற்றவர். அலகாபாத் பல்கலைக்கழகத்தின் வாயிலாக இவருக்கு சாகித்ய ரத்னா விருது வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sudama Ki Mukti Amar Goswami – सुदामा की मुक्ति – अमर गोस्वामी". Pustak.org:5200. Archived from the original on 19 August 2014. பார்க்கப்பட்ட நாள் 4 July 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமர்_கோசுவாமி&oldid=3721519" இலிருந்து மீள்விக்கப்பட்டது