அமர் அர்சி
அமர் அர்சி | |
|---|---|
| பிறப்பு | 15 சனவரி 1967 பக்வாரா, பஞ்சாப், இந்தியா |
| பணி | பஞ்சாபிப் பாடகர் |
| செயற்பாட்டுக் காலம் | 1991 – தற்போது வரை |
அமர் அர்சி (Amar Arshi) ஒரு பஞ்சாபிப் பாடகர் ஆவார். அவர் இந்தியாவின் பஞ்சாபில் உள்ள பக்வாரா அமர்ஜித் சிங் என்ற பெயரில் பிறந்தார்.[1] தற்போது இலண்டனில் வசித்து வருகிறார். அவரது முதல் இசைத்தொகுப்பு 1991 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இவரது பாடல்களில் "ஆஜா நி ஆஜா", "காலா சஸ்மா" மற்றும் "ரங்ளி கோத்தி" ஆகியவை அடங்கும்.[2][3] "காலா சஷ்மா" ஒரு பாலிவுட் திரைப்படமான பார் பார் தேக்கோ (2016) விற்காக மறுவடிவாக்கம் செய்யப்பட்டது.[4]
இசைத்தட்டு வரைபடம்
[தொகு]"பெஹ்லி முல்கத்", "முல்காதான்", "சேடி நா", "மிட்டே பெர் வர்கி மைனு", "வைர்னே", "தின் பிச்சஹான் தே", "ஹேய் ஓ ரப்பா", "கெர்ஹே தே கெர்ஹா", "மியா தே நவ்ரதே", "கப்ரு", "நா சால்டா" போன்ற இவரது துள்ள வைக்கும் கவர்ச்சியான பஞ்சாபி பாடல்களுக்காகவும் பஞ்சாபி இசை வகையின் பங்களிப்புகளுக்காகவும் அமர் அர்சி அங்கீகாரம் பெற்றுள்ளார். இவரது சக்திவாய்ந்த குரல், துடிப்பான இசை மற்றும் நவீன துடிப்பு மிக்க இசையுடன் பங்க்ரா இசையைக் கலக்கும் திறன், சிறந்த பஞ்சாபிக் கலைஞர்களுடனான இவரது ஒத்துழைப்புகள் ஆகியவை நன்கு அறியப்பட்ட பண்புகளாகும்.
இசைத்தொகுப்புகள்
[தொகு]| ஆண்டு | ஆல்பம் | இணை பாடகர் (s) | குறிப்புகள் |
|---|---|---|---|
| 1991 | காலா சஷ்மா | ||
| 2002 | ஆஜா நி ஆஜா | ||
| 2006 | ரங்க்லி கோத்தி | ||
| 2009 | நா சால்டா |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Amar Arshi (@realamararshi) | Twitter" (in ஆங்கிலம்). Retrieved 2018-06-01 – via Twitter.
- ↑ "Kala Chashma singer Amar Arshi says song going viral hasn't given him any money". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-09-04. Retrieved 2023-05-31.
- ↑ "Rangli Kothi Amar Arshi, Sudesh Kumari, Narender Jyot Mp3 Song". pendujatt.net (in ஆங்கிலம்). Retrieved 2023-05-31.
- ↑ "Katrina Kaif Rocks This Party. Put Your Kala Chashma On – NDTV Movies". Movies.ndtv.com. Retrieved 2016-07-27.