அமர்நாத் சேகல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அமர்நாத் சேகல் ( Amarnath Sehgal 5 பிப்பிரவரி 1922- 28 திசம்பர் 2007) என்பவர் இந்திய சிற்பக்கலைஞர் , ஓவியர்  கவிஞர் மற்றும் கலை ஆசிரியர்  ஆவார். ஒரு பொறியாளராக இலாகூரில் வாழ்க்கையைத் தொடங்கிய அமர்நாத் சேகல் கலைத் துறையில் ஈடுபட்டார். இவர் இறந்த பின்னர் இந்திய அரசு 2008 ஆம் ஆண்டில்  பத்ம பூசண் விருது வழங்கியது. [1]

பிறப்பும் படிப்பும்[தொகு]

தற்பொழுது பாக்கித்தானில் உள்ள வடக்குப் பஞ்சாபில் அட்டாக் என்னும் ஊரில் பிறந்த அமர்நாத் சேகல், தமது கல்லூரிப் படிப்பை இலாகூரில் முடித்தார். பின்னர் 1942இல் பனாரசு இந்து பல்கலைக் கழகத்தில் வேதியலில் பட்டம் பெற்றார். அதன் பிறகு இலாகூரில் பொறியாளராகப் பணி புரிந்தார். அந்தச் சமயத்தில் சிற்பம்,ஓவியம் ஆகிய கலைகளைப் பயில ஆர்வம் ஏற்பட்டது.[2]

கலைப் பணிகள்[தொகு]

1951 இல் நியூயார்க்கில் சிற்பக் கண்காட்சியை முதன் முதலாக நடத்தினார். அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் புது தில்லியில் பள்ளியில் ஆசிரியர் ஆனார். பின்னர் கலைக் கல்லூரியிலும் தில்லிப் பல்கலைக் கழகத்திலும் கலை ஆசிரியராகப் பணிபுரிந்தார். தனி மனித உரிமை, மனித மாண்புகள், அரசியல் வன்முறைக்கு எதிரான கருத்துகளைப் பரப்புதல் ஆகியவற்றில் இவர் தம் படைப்புகளில் வெளிப் படுத்தினார். [3][4][5]

சிற்பக்கலை நேர்த்தியுடன் 140 அடி நீளமுடைய ஒரு சுவர்ச் சித்திரத்தை 3 ஆண்டுகள் உழைத்து, புது தில்லி அறிவியல் பவனில் அமைத்துத் தந்தார். இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் கட்டடப் புதுப்பிக்கும் வேலை நடந்தபோது இந்தப் புகழ் வாய்ந்த சுவர்ச் சிற்பம் அழிக்கப்பட்டது. இதனைக் கண்டு மிகவும் மன வேதனை யுற்ற அமர்நாத் சேகல் அரசுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து 12 ஆண்டுகள் போராடி வெற்றி பெற்றார். படைப்பாளர் என்கிற முறையில் இவருக்கு அரசு இழப்பீட்டுத் தொகை வழங்கியது.[6][7][8]

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நிகழ்ந்த ஐக்கிய நாட்டு சபை மாநாட்டில் காப்டிவ் என்று பெயரிடப்பட்ட வெண்கலச் சிற்பத்தை அமர்நாத் சேகல் செய்தார். அந்தச் சிற்பம் ரோபென் தீவில் அமைக்கப்பட்டது.

இராமாயணம் மற்றும் மகாபாரதம் கதைக் காட்சிகளை ஓவியங்களாக வரைந்தார். அவற்றின் கண்காட்சியை ஏ.பி.ஜே அப்துல் கலாம் தொடங்கி வைத்தார்.

கவிஞராக[தொகு]

சிற்பக்கலை மட்டுமல்லாது ஒரு கவிஞராக விளங்கினார். லோன்சம் ஜர்னி, அவைட்டிங் அ நியூ டான் என்னும் கவிதைத் தொகுப்புகளைப் படைத்தார்.

விருதுகள்[தொகு]

  • லலித் கலா அகாதமியின் மதிப்புறு உறுப்பினர் விருது (1993)
  • பத்ம பூசண் விருது (2008)

மேற்கோள்[தொகு]

  1. "Padma Awards". Ministry of Home Affairs, Government of India (2015). மூல முகவரியிலிருந்து 15 November 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் July 21, 2015.
  2. "Renowned sculptor Amarnath Sehgal passes away". Zee News (28 December 2007). பார்த்த நாள் 20 August 2013.
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; hindu என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. V. K. Subramanian (1 January 2003). Art Shrines of Ancient India. Abhinav Publications. பக். 120. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7017-431-8. https://books.google.com/books?id=LcMhnC9sYS8C&pg=PA120. பார்த்த நாள்: 20 August 2013. 
  5. Bhattacharya, p. 18
  6. Pravin Anand. "India Key milestones for intellectual property" (PDF). BuildingIPValue.com. பார்த்த நாள் 28 February 2012.
  7. Radhakrishnan; Dr. R Radhakrishnan and Dr.S. Balasubramanian (2008). Intellectual Property Rights: Text and Cases. Excel Books India. பக். 62–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7446-609-9. https://books.google.com/books?id=nEc8PtMOuzsC&pg=PA62. பார்த்த நாள்: 20 August 2013. 
  8. "After Sale Service". Indian Express (13 March 2005). பார்த்த நாள் 20 August 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமர்நாத்_சேகல்&oldid=2693978" இருந்து மீள்விக்கப்பட்டது