அமர்கோஸ்வாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அமர்கோஸ்வாமி (1945 ஆம் ஆண்டு நவம்பர் 28 ) பத்திரிக்கையாளராகவும் முக்கியத்துவம் வாய்ந்த அறிவியல் சார்ந்த படைப்புகளை எழுதிய எழுத்தாளராகவும் இந்தி இலக்கிய உலகில் அறியப்படுபவர். இவர் நையாண்டிக் கதைகள், சிறுகதைகள், கவிதைகள், நாவலகள் மேலும் பெங்காலியிலிருந்து ஹிந்தியில் மொழிபெயர்ப்பு செய்தல் போன்ற இலக்கிய பங்களிப்புகளை வழங்கியுள்ளார். இவருடைய கதைகள் அனைத்திந்திய வானொலியிலும் குறும்படங்களாகவும் உருவாக்கப்பட்டுள்ளன.

சுயசரிதை[தொகு]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

இந்தியா பிரிக்கப்படுவதற்கு முன்பிருந்த முல்தானில் பிராமணக்குடும்பத்தில் பிறந்தார். இவரின் இரண்டாம் அகவையில் தற்போது பாகிஸ்தானில் இருக்கும் முல்தானிலிருந்து இடம் பெயர்ந்து உத்தர பிரதேசத்தில் உள்ள மிசார்புருக்கு குடிபுகுந்தனர். இவர் இந்தியில் முதுகலைப்பட்டம் பெற்றவர். அலகாபாத் பல்கலைக்கழகத்தின்  வாயிலாக இவருக்கு சாகித்ய ரத்னா விருது வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமர்கோஸ்வாமி&oldid=2372830" இருந்து மீள்விக்கப்பட்டது