உமர்கோட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அமர்கோட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஓமர்கோட் என்றும் அழைக்கப்படும் உமர்கோட் என்பது, பாகிசுத்தானின் சிந்து மாகாணத்தில், உமர்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இந்த நகரம், மாவட்டத் தலை நகரமான கராச்சி, ஐதராபாத் போன்ற முக்கிய நகரங்களுடன் போக்குவரத்து மற்றும் பிற தொடர்புகளைக் கொண்டுள்ளது.

வரலாறு[தொகு]

முன்னர் அமர்கோட் என்று அழைக்கப்பட்ட இந்நகரம் முன்னர், இன்றைய இந்தியாவின் இராசத்தானத்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய பரந்த சிந்து மாகாணத்தின் தலைமையிடமாகச் செயல்பட்டது. இது முகலாயர் காலத்திலும், பிரித்தானியர் ஆட்சிக் காலத்திலும் சிறப்பிடம் பெற்று விளங்கியது. பெரும் புகழ் பெற்று விளங்கிய முகலாயப் பேரரசர் அக்பர் பிறந்ததும் இந்நகரத்திலேயே. அக்பரின் தந்தை உமாயூன், சேர் சா சூரியிடம் தோல்வியுற்று நாட்டைவிட்டுத் தப்பியபோது அமர்கோட்டின் இந்து சோதா இராசபுத்திர அரசர் ராணா பிரசாத் சிங் அவருக்கு அடைக்கலம் கொடுத்திருந்தபோதே இது இடம்பெற்றது. அக்பர் பின்னர் பேரரசரான போது இந்துக்கள், முசுலிம்கள் ஆகிய இரு பிரிவினராலுமே பெரிதும் விரும்பப்பட்டார். உமர்கோட் கோட்டையில் உள்ள அக்பரின் பிறந்த இடம் உள்ளிட்ட பல வரலாற்றுச் சிறப்புப் பெற்ற இடங்கள் இந்நகரத்தில் உள்ளன.

அமர்கோட் சாகிரின் இறுதி சாகிர்தார் ராணா சந்திர சிங் (1931-2009), 1947 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல தடவை நாடாளுமன்ற உறுப்பினராகவும், நடுவண் அரசு அமைச்சராகவும் இருந்துள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உமர்கோட்&oldid=2790368" இலிருந்து மீள்விக்கப்பட்டது