உள்ளடக்கத்துக்குச் செல்

அமராவதிபுதூர்

ஆள்கூறுகள்: 10°01′19″N 78°46′03″E / 10.021881°N 78.767536°E / 10.021881; 78.767536
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமராவதிபுதூர்
—  ஊராட்சி  —
அமராவதிபுதூர்
அமைவிடம்: அமராவதிபுதூர், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°01′19″N 78°46′03″E / 10.021881°N 78.767536°E / 10.021881; 78.767536
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

அமராவதிபுதூர் (ஆங்கிலம்: Amaravathipudur) இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் உள்ள சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்தில் அமைந்துள்ளது. இது காரைக்குடி-தேவகோட்டை தேசிய நெடுஞ்சாலை 210 (NH-210) இல் தேவகோட்டை இரஸ்தாவிற்கு அடுத்து அமைந்துள்ளது. இவ்வூர் பேருந்து நிலையத்தை உள்ளூர்வாசிகள் உசிலாண்டி என்பர்.

கவிஞர் கண்ணதாசன் இவ்வூரில் உள்ள சுப்பிரமணியம் செட்டியார் குருகுலத்தில் எட்டாம் வகுப்பு வரைப் படித்தார்.[4]

வயிநாகரம் குடும்பத்தார்

[தொகு]

நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் 274இல் 200க்கும் அதிகமான தலங்களில் திருப்பணிகள் செய்துள்ளனர்.[5] இவர்களுள் குறிப்பிட்டதக்கவர்கள் அமராவதிபுதூர் வயிநாகரம் குடும்பத்தார்.

இக்குடும்பத்தை சார்ந்த வயி.நாக.ராம.நாகப்ப செட்டியார் 19ஆம் நூற்றாண்டு மத்தியில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை பழுது பார்த்து 1877இல் குடமுழுக்கு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[6]

காட்டுச் சிவன் கோயில்

[தொகு]

காட்டுச் சிவன் கோவில் என்று அழைக்கப்படும் வாழவந்தநாயகி உடனாய வந்தருளீசுவரர் கோயில் அமராவதிபுதூரிலிருந்து இரண்டு கி.மீ தொலைவில் நடுக்காட்டில் அமைந்துள்ளது.

காந்தி சமதர்ம பாடசாலை

[தொகு]

இது விடுதலைப் போராட்ட வீரர் பிச்சப்பா சுப்பிரமணியத்தால் 1926இல் தொடங்கப்பெற்ற பள்ளிக்கூடம்.

காந்தி சமதர்ம பாடசாலை

சங்கரபதிக்கோட்டை

[தொகு]
சங்கரபதிக்கோட்டையின் சிதிலமடைந்த காட்சி.

200 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான சங்கரபதிக்கோட்டை (குருகுலத்தின் பின்புறம் உள்ள பெரும் காட்டுப்பகுதியில்) அமராவதிபுதூரில் அமைந்துள்ளது. இதனை 18 ஆம் நூற்றாண்டில் சிவகங்கையை ஆண்ட முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவரின் படைத்தலைவராக இருந்த மருது சகோதரர்கள் (சின்னமருது மற்றும் பெரியமருது) ஆங்கிலேயர் படைகளை எதிர்த்த போது இந்த சங்கரபதிக்கோட்டையிலேயே ஆங்கிலேயர்களால் மருது சகோதரர்கள் கைதுசெய்யப்பட்டனர்.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. வனவாசம் - எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்
  5. பண்டிதமணி மு.கதிரேசனார் (1953). நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு.
  6. மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் வெளியீடு (2017). தல வரலாறு. pp. 188, 189 மற்றும் 196.
  7. 200-year-old Independence Landmark is Castle in the Air. Is State Listening?
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமராவதிபுதூர்&oldid=3020152" இலிருந்து மீள்விக்கப்பட்டது