அமரவிளா இராமேசுவரம் மகாதேவர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமரவிளா இராமேசுவரம் மகாதேவர் கோயில்
கோயிலின் மேற்கு கோபுரம்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:கேரளம்
மாவட்டம்:திருவனந்தபுரம் மாவட்டம்
அமைவு:அமரவிளா, நெய்யாற்றிங்கரை [1]
ஆள்கூறுகள்:8°23′53″N 77°05′36″E / 8.3980217°N 77.0933865°E / 8.3980217; 77.0933865ஆள்கூறுகள்: 8°23′53″N 77°05′36″E / 8.3980217°N 77.0933865°E / 8.3980217; 77.0933865
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கேரள பாணி

அமரவிளா இராமேசுவரம் சிறீ மகாதேவர் கோயில் (Amaravila Rameswaram Sri Mahadeva Temple) என்பது சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழங்கால இந்துக் கோயில் ஆகும். இது இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நெய்யாற்றிங்கரை வட்டத்தின் அமரவிளாவில் நெய்யாறு கரையில் அமைந்துள்ளது. [2] கோயிலின் பிரதான தெய்வம் மேற்கு நோக்கி இராமேசுவரத்தை எதிர்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கேரளாவின் 108 சிவ ஆலயங்களில் ஒன்றாகும். சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தக் கோயில் பரசுராமரால் நிறுவப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது.[3][4]அமரவிளா கிராமத்தில் உள்ள நெய்யாற்றிங்கரை நகரத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. 108 சிவாலய தளத்தில் உள்ள இரண்டு இராமேசுவரம் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். கொல்லம் இராமேசுவரம் மகாதேவர் கோயில் இரண்டாவது இராமேசுவரம் கோயில். இந்த கோயில் கொல்லம் நகரில் அமைந்துள்ளது.[5]


குறிப்புகள்[தொகு]

  1. "KERALA TEMPLES - 108 SIVA TEMPLES IN KERALA". www.thekeralatemples.com.
  2. "Rameshwaram - Mahadeva Temple". www.shaivam.org.
  3. "Amaravila Rameswaram Mahadeva Temple near Neyyattinkara". www.vaikhari.org.
  4. Kunjikuttan Ilayath. 108 Siva Kshetrangal. H and C Books. 
  5. "108 Shiva Temples created by Lord Parasurama in Kerala – Sanskriti - Hinduism and Indian Culture Website". 3 March 2018. 18 ஏப்ரல் 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 நவம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.