அமன்ஜோத் கவுர்
2025-இல் கவுர் | ||||||||||||||||||||
| தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| பிறப்பு | 25 ஆகத்து 2000 மொஹாலி, பஞ்சாப், இந்தியா | |||||||||||||||||||
| மட்டையாட்ட நடை | வலது கைப்பழக்கமுள்ள | |||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | வலது கை வேகப்பந்துவீச்சு | |||||||||||||||||||
| பங்கு | பன்முக ஆட்டக்காரர் | |||||||||||||||||||
| பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||
| நாட்டு அணி | ||||||||||||||||||||
| ஒநாப அறிமுகம் (தொப்பி 139) | 16 ஜூலை 2023 எ. வங்காளதேசம் | |||||||||||||||||||
| கடைசி ஒநாப | 2 நவம்பர் 2025 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||
| ஒநாப சட்டை எண் | 30 | |||||||||||||||||||
| இ20ப அறிமுகம் (தொப்பி 73) | 19 ஜனவரி 2023 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||
| கடைசி இ20ப | 30 டிசம்பர் 2025 எ. இலங்கை | |||||||||||||||||||
| இ20ப சட்டை எண் | 30 | |||||||||||||||||||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||
| ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||
| 2017/18–2018/19, 2022/23–present | பஞ்சாப் மகளிர் அணி | |||||||||||||||||||
| 2019/20–2021/22 | சண்டிகர் மகளிர் அணி | |||||||||||||||||||
| 2023 – தற்போது வரை | மும்பை இந்தியன்ஸ் | |||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
| ||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 10 ஜனவரி 2026 | ||||||||||||||||||||
அமன்ஜோத் கவுர் (Amanjot Kaur) 2000 ஆகஸ்ட் 25 அன்று பிறந்த இந்திய துடுப்பாட்ட வீராங்கனை. [1] தற்போது பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார்.இவர் வலது கை மிதவேக பந்துவீச்சாளராகவும் வலது கை துடுப்பாட்ட வீராங்கனையாகவும் விளையாடுகிறார்.[2][3]
சர்வதேச வாழ்க்கை
[தொகு]அமன்ஜோத் கவுர் 2023 ஜனவரியில் இந்திய அணிக்காக அறிமுகமானார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் 41 ரன்கள் எடுத்து ஆட்டநாயகி விருதைப் பெற்றார்.[4] 2023 ஜூலை 16 அன்று வங்கதேசத்திற்கு எதிராக ஒருநாள் சர்வதேச போட்டியில் அறிமுகமான இவர், 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.[5] 2023 ஜூலை மாதத்தில் இந்தியாவின் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டி அணியில் தேர்வு செய்யப்பட்டார்.[6] 2025 ஆம் ஆண்டு மகளிர் துடுப்பாட்ட உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இவர் தேர்வு செய்யப்பட்டார். தொடக்கப் போட்டியில் முக்கிய பங்கு வகித்ததுடன், இறுதிப்போட்டியில் முக்கியமான ஒரு பிடிப்பையும் எடுத்தார். அதன் மூலம் இந்திய அணி தனது முதல் உலகக் கோப்பை பட்டத்தை வென்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Amanjot Kaur". ESPNcricinfo. Retrieved 24 January 2023.
- ↑ "Amanjot Kaur's dream debut in India win". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-01-20. Retrieved 2023-01-25.
- ↑ "WPL Auction 2023: Mumbai Indians Buys Harmanpreet Kaur For Rs 1.80 Cr" (in en). English Jagran. 13 February 2023. https://www.thedailyjagran.com/cricket/wpl-auction-2023-mumbai-indians-buys-harmanpreet-kaur-for-rs-180-cr-10064937.
- ↑ "Amanjot, Deepti star as India begin tri-series with a win". ESPNcricinfo. 19 January 2023. Retrieved 25 January 2023.
- ↑ "1st ODI, Mirpur, July 16, 2023, ICC Women's Championship". ESPNcricinfo. Retrieved 16 July 2023.
- ↑ "Team India (Senior Women) squad for 19th Asian Games". Board of Control for Cricket in India. Retrieved 2 November 2023.